உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், பிளே ஆஃப் செல்லவும் அணிகள் எவை என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு போட்டியிடும் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் நேற்று ஈடன் கார்ட்டனில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற மும்பை அணி பந்துவீசி முடிவு செய்தது. ஏனென்றால் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் இண்டாவதாக விளையாடும் அணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்று நினைத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியானது 16 ஓவர்கலகக்குறைக்கப்பட முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கத்திலேயே பில் சால்ட் விக்கெட் விழுந்தது. அதனை தொடந்து நரேன் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதனால் மும்பை அணிக்கு உத்வேகம் கிடைத்தது.4வது ஓவரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் விழுக கொல்கத்தா அணி தடுமாறியது. இருந்த போதிலும் நிலையாக நின்று விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 20 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழதார்.
இவர்களை தொடந்து பின்னர் வந்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் சொலிக்காத நிலையில் கொல்கத்தா அணி 1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளில் இழந்து 157 ரன்களை அடித்தது. இதனை தொடந்து களமிறங்கிய மும்பை அணி பவர் பிளே ஓவர்களில் அற்பதமாக விளையாடியது. இதனை பார்த்த பலரும் மும்பை அணி தான் வெற்றிபெறும் என்று நினைத்தனர். ஆனால் அதிர்ச்சியே இஷான் கிஷான் ஆட்டமிழந்த பிறகுதான் தொடர்ந்தது.

விக்கெட்டுகள் மும்பை அணிக்கு விழுந்துகொண்டே இருக்க அதை தடுக்க ஒரு பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் கடந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய சூரியகுமார் யாதவிற்கு சரியான திட்டம் தீட்டி அவுட் செய்தது கொல்கத்தா அணி. அவர் தேர்வு செய்த தவறான ஷாட்டால் அவுட் ஆனார். ஒருவேளை சூரியகுமார் யாதவ் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக மும்பை அணி வெற்றி பெற்றிருக்கும்.
இந்நிலையில் தான் சூரியகுமார் யாதவ் குறித்து பேசிய முன்னாள் சீஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு பேசுகையில் : சூர்யகுமார் யாதவுக்கு எதிராக மற்ற அணியினர் சரியான திட்டத்துடன் வருகிறார்கள். அவர்கள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மெதுவாகவும் அகலமாகவும் பந்து வீசுகிறார்கள். இதை உலகக் கோப்பையிலும் பார்த்தோம். ஒரு பக்கத்தில் பெரிய எல்லையுடன் ஆடுகளம் மெதுவாக இருக்கும் போது, அணிகள் அவருக்கு எதிராக ஒரு திட்டத்தை வைத்துள்ளனர். அதற்கு எதிராக சூரியகுமார் யாதவ் திட்டத்தை வகுக்க வேண்டும்

மேலும் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் பேசுகையில் :சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடும் திறன் இல்லாததால் ஆட்டம் இழக்க நேரிட்டது. கொஞ்சம் ஈரம் இருந்தது. ஆனால் மும்பை வீரர்களின் ஷாட் தேர்வு மோசமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ரோஹித் ஷர்மா பெரிய சிக்ஸர்களுக்கு பெயர் பெற்றவர். ஆனால் இன்று அவர் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். பேட்ஸ்மேன்ஷிப் இல்லாததே மும்பை தோல்வியடைந்தது என்றார் அம்பதி ராயுடு.





