உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு அடுத்து ஒருவாரம் கழித்து ஜூன் மாதம் ஆரம்பத்தில் உலக கோப்பை டி20 தொடரானது ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த தொடரானது ஆமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்க இருக்கிறது. மேலும் அமெரிக்க அணியும், கனடா அணி உள்பட உலகின் பல அணிகள் இந்த தொடரில் மோத இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் யார் யார் விளையாடுவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிவரும் சில வீரர்களும் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சென்னை அணியின் அதிரடி வீரரான சிவம் துபே உலக கோப்பையில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த ஐபிஎல் போட்டியில் அவர் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த லக்னோவிற்கு எதிரான போட்டியில் கூட சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்த தொடரில் விளையாடிய 169.99 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 311 ரன்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் தான் பல முன்னாள் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வரும் உலக கோப்பை டி20 கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணியில் சிவம் துபே இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறுகின்றனர். இருந்த போதிலும் சமீபத்தில் ரோஹித் சர்மா கொடுத்த பேடியில் தனக்கு இம்பாக்ட் விதி பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனால் சிவம் தூபேவிற்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Time to defend!💪🏻
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2024
🦁2️⃣1️⃣0️⃣#CSKvLSG #WhistlePodu pic.twitter.com/LvF9hUoJsl
இந்நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் அம்பதி ராயுடு. அவர் கூறுகையில் : இருவரும் ஒரே இடத்திற்கு போட்டியிடவில்லை. ஹர்திக் மற்றும் ஜடேஜா இந்திய அணியில் ஃபினிஷர்களாக உள்ளனர், மேலும் 4 அல்லது 5-வது இடத்தில் விளையாடும் பேட்டர் போன்டர்வர் சிவம் துபே.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிலைமைகள் மெதுவாக இருக்கும்போது சிவம் துவே சிறப்பாக விளையாடுவார். ஆனால் 16 மற்றும் 20 ஓவர்களுக்குள் துபேயின் ஸ்டிரைக் ரேட் அதிகமாக இல்லை, அதனால் இந்திய அணியில் ஹர்திக் மற்றும் ஜடேஜாவுக்கு அந்த பங்கு இருப்பதாக நான் உணர்கிறேன் என்றார் அம்பதி ராயுடு.





