உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.சென்னை அணி இதற்க்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று கடந்த டெல்லி அணிக்கான போட்டியில் தோல்வியை தழுவிய இந்த போட்டியில் விளையாடியது.

அதேபோல் ஹைதராபாத் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றும் இருந்தது.சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இச்சின் மற்றும் ருதுராஜ் அதிக அளவில் ரன்களை குவிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணி மிகவும் பதற்றமான நிலையில் சென்றது. அதன் பின்பு மிடில் ஓவரில் வந்த சிவம் துபே அவரது அதிரடி திறமையை அடித்துக்காட்டிருந்தார். அதன் மூலம் தான் சென்னை அணிக்கு ஓர் அளவாவது ரன்களை எட்ட முடிந்தது என்றும் கூறலாம். அதன் பின்பு அந்த எந்த வீரர்களும் ரன்களை அடித்து குவிக்காததால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 165 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

அதில் அதிகபட்சமாக சிவம் துபே மட்டும் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களும் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக ரகானே 30 பந்துகளை 35 ரன்களையும் அவர் அடித்திருந்தார். அதேபோல் ஜடேஜாவும் 23 பந்துகளில் 31ரன்களை எடுத்து இருந்தார். இருப்பினும் சென்னை அணியால் 165 ரன்கள் அடிக்க முடிந்தது. அதன் பின்பு பேட்டிங் செய்ய வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அவர்களது அதிரடியை காட்ட தொடங்கினர்.
ஹைதராபாத் அணி சென்னை அணியின் ரன்களை 18.2 ஓவர்களிலே எட்டி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதில் அதிக பட்சமாக மார்க்ரம் 50 ரன்களும் அபிஷேக் ஷர்மா 37 ரன்களும் ஹெட் 31 ரன்களையும் அடித்து இருந்தது. எனவே ஹைதராபாத் அணி சென்னை அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் 4 இடத்திற்கு சென்றுள்ளது. இறுதி ஓவரில் களமிறங்கிய தோனியால் அணிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.அவர் இரண்டு பந்துகளில் ஒரு ரன்னை மட்டுமே அவர் அடித்து இருந்தார்.

அவர் கடைசில் இறங்குவதற்கு முன்பும் சென்னை அணியில் மிட்சல் பொறுமையாக விளையாடி வந்தார்.டோனி அதற்க்கு முன்பு களமிறங்கி இருக்க வேண்டும் என்றும் பல வீரர்கள் கூறி இருந்தனர். இது குறித்து முன்னாள் இந்திய வீரர் அமப்தி ராயுடு கூறுகையில், இன்னிங்ஸின் 18வது ஓவரில் தோனி களத்தில் இறங்கி இருந்திருக்க வேண்டும். இது போல SLOW டிராக்குகளில் ரன்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் மற்றும் அணியின் தேவை என்ன என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.




