இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்த இங்கிலாந்து அணி இந்தியா அணியின் பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் திணறியே வந்தது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சின் ஆதிக்கமே தான் அதிக அளவில் இருந்தது. இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் அடித்திருந்தனர்.

இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இந்திய அணியின் சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மற்றும் கில் சதத்தை பூர்த்தி செய்து இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மூன்று வீரர்கள் அரைசதத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.
இதில் இன்றைய நாள் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும் அத பின் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது இருந்தது. இதில் குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளை பதிவு செய்தார் ஆண்டர்சன். ஆண்டர்சன் இதுவரை 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவரது 32 முறை 4 விக்கெட்டுகளையும் 32 முறை 5 விக்கெட்டுகளையும் மூன்று முறையும் 10 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
The moment for the day
— CricTracker (@Cricketracker) March 9, 2024
James Ander700n 🙌pic.twitter.com/aupoB5rvSN
இதுவரை எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 700 விக்கெட்டுகளை பதிவு செய்ததில்லை. இவர் தான் முதல் வேகம் பந்துவீச்சாளர் 700 வது விக்கெட்டை பதிவு செய்தார். இவருக்கு முன் முரளிதரன் 800 விக்கெட்டுகளை வார்னே 708 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் தற்பொழுது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறார் இங்கிலாந்து அணி தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களில் விளையாடி வருகிறது





