ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்த அணியானது தங்களுடைய முதல் உலக கோப்பையை 1975ல் வென்று அதற்கு அடுத்து வந்த 1979 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையையும் வென்றார்கள். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையே வேறு. ஏனென்றால் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது. இது இவர்களுக்கு மட்டுமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இவர்களது அதிரடி ஆட்டமும், எப்படி பந்துகளை வீசினாலும் நாலாபுறமும் சிக்ஸர்களை விளாசும் இவர்களுடைய வீரர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தன்னுடைய அதிரடியாயும், போட்டிகளில் வெல்லும் திறமையையும் இழந்தது. இதனால் அணிக்கு தேவையான பொருளாதாரமும் பெருமளவு அடிபட்டிருக்கிறது. இதனாலேயே பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் போன்ற வெளிநாட்டு தொடர்களில் விளையாடி பணம் சம்பாரிக்கின்ட்றனர்.
ஆண்ட்ரே ரசல் கொடுத்த பேட்டி :
இப்படிபட்ட நிலையில் தான் அடுத்த வருடம் அமெரிக்காவில் நடக்கும் டி20 உலக கோப்பையை விளையாடுவதற்காக தான் மாற்று டி20 போட்டிகளை தியாகம் செய்ய தயார் என்று கூறியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல். இது தொடர்பாக வர கொடுத்திருந்த பேட்டியில் “நான் வில்லிட தயாராக இருக்கிறேன். குறிப்பாக அடுத்த உலக கோப்பையில் என்னால் நமது அணிக்கு ஏதேனும் சிறப்பான ஒரு விளையாட்டை தர வேண்டும் என விரும்புகிறேன்.

அதற்கு முன்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு சில தொடர்களில் விளையாடுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். அதாவது நேரடியாக நான் உலகக்கோப்பையில் தான் விளையாடுவேன் என்று சொல்ல விரும்பவில்லை. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கு சில டி20 லீக் தொடர்களில் பங்கேற்பதை நான் தியாகம் செய்ய வேண்டும் என்பதையும் அறிவேன். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக உலக கோப்பையில் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அனைத்து பங்கையும் ஆற்றுவதற்கு விரும்புகிறேன்.
ஆனால் அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக ஒரு டி20 தொடர் நடைபெற உள்ளது. இருப்பினும் அதில் விளையாடுவதற்காக என்னிடம் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் யாரும் எதுவும் சொல்லவில்லை. எனவே தற்போது வேறு தொடரில் விளையாடி வரும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட எப்போதும் தயாராகவும் கடினமான பயிற்சிகளையும் எடுத்து வருகிறேன் என்று கூறினார் அன்றே ரசல்.





