அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரானது இன்று தொடங்கியுள்ள நிலையில் இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து அணியானது மோதி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணியானது வரும் 8ஆம் தேதி சென்னையில் உள்ள எப்பக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளகிறது. இதனால் ஏற்கனவே சென்னையை அடைந்த வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் உலக கோப்பை தொடங்குவர்க்கு முன்னதாக இருந்த பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த ஒருநாள் போட்டியிலும் கடைசி 2 போட்டிகளில் அவர் காலத்து கொள்ளாமல் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் உலக கோப்பையில் விளையாடுவார் இல்லையா என்பது குறித்து பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.
அவர் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “அவர் நிச்சயமாக உலக கோப்பை போட்டிக்கான எங்களுடைய திட்டத்தில் இருந்து விலக்கப்படவில்லை, ஆனால் அந்த பயிற்சி ஆட்டங்களில் அவரை ஆபத்தில் ஆழ்த்த நாங்கள் தயாராக இல்லை. இன்று எங்களுக்கு முக்கிய பயிற்சி கிடைத்துள்ளது, பின்னர் நாளை மற்றொரு பயிற்சி இருக்கிறது எனவே அவர் அங்கு கலந்து கொள்வார்.

மேலும் அவர் முதல் போட்டியின் தேர்வுக்கு தகுதியாக இருக்கிறாரார் என்பதைப் பார்ப்போம். இந்த அடுத்த இரண்டு நாட்கள் அழுத்தம் கொடுப்பதற்கு மிகவும் முக்கியமானது, அதன் மூலம் அவர் சரியாக முதல் போட்டிக்கு கிடைப்பாரா என்பது தெரியவரும் என்றார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “கடந்த 18 மாதங்களில், நாங்கள் விளையாடுவதற்கான மூன்று வழிகளை உருவாக்க விரும்புகிறோம், அதில் ஒன்று நிச்சயமாக அனைத்து ஆல்ரவுண்டர்களுடனும், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் இருக்கும். கடந்த 18 மாதங்களில் அந்த அணி விளையாடப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், எனவே அந்த இரண்டு வீரர்களும் ஒரே XI இல் இருக்கக்கூடிய உண்மையான வாய்ப்பு உள்ளது, நாங்கள் அதை நிராகரிக்கவில்லை.
“திரைக்குப் பின்னால், நாங்கள் அதைப் பற்றி செல்ல விரும்பும் வழியில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். உலகக் கோப்பை, இது ஒரு நீண்ட போட்டி. நாங்கள் எங்கள் அணி சரியாக இருப்பதைப் போல நாங்கள் உணர்கிறோம், நாங்கள் சிறந்த நெகிழ்வுத்தன்மையைப் பெற்றுள்ளோம் என்று மேலும் கூறினார்.




