இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போல தோனி 2019 உலக கோப்பை போட்டியில் ஆட்டமிழந்ததையும் யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் தன்னுடைய முதல் ஆட்டத்தை ரன் அவுட் மூலம் ஆரம்பித்த தோனி இந்தியாவுக்கான தன்னுடைய கடைசி ஆட்டத்திலும் ரன் அவுட் ஆனார். அது இனித்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருந்தது.
இருந்த போதிலும் ஐபிஎல் போட்டியில் தொறந்து விளையாடிவரும் தோனி கடந்த சீசன் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் அவருக்கு அந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிகமாக சிரமப்பட்ட நிலையில் அடுத்த சீசனிலும் விளையாடுவேன் என்று சூசகமாக கூறியிருந்தார். இந்த நிலையில் தோனி ஒருவேளை இந்த சீசன் சில போட்டிகள் மட்டும் விளையாடியவாரா என்பது குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் அணில் கும்ளே.

அவர் கூறுகையில் “அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிலிருந்து திரும்பி வர கடினமாக உழைக்க வேண்டும், ஆனால் அவர் எப்போது ஓய்வு பெற போகிறார் என்பது பற்றி உங்களுக்கு எந்த துப்பும் கொடுக்க மாட்டார். அவர் சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறிய விதத்தில் நாங்கள் அதைப் பார்த்தோம். ரசிகர்களும் வீரர்களும் அவரை விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
எல்லா வழிகளிலும் அவர் தயாராக இருந்தால், அவர் முழு சீசனையும் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு ஒரு சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த சீசனில் அவர் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் ஸ்டம்புகளுக்குப் பின்னால், ஸ்டம்புகளுக்கு முன்னால் அவர் சிறந்த முறையில் விளையாடினார். அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் தோனி கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் இந்த சீசன் கடினமாக இருக்கும் என்றார் அணில் கும்ளே.

மேலும் தோனி குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில் “அவர் சீசனை பாதியிலேயே விட்டுவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. எம்.எஸ். தோனி அதை தானே முடிவு செய்வார். கடந்த சீசனிலும் அவரது முழங்கால் பற்றிய கவலைகள் இருந்தன. அவர் போராடினார் ஆனாலும் விளையாடினார். கடந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் வந்தபோது, அவர் அடுத்த CSK கேப்டனாக வருவதைப் பற்றி பேசப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழித்து, ஸ்டோக்ஸ் வெளியேறினார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வருவாரா என்று தெரியவில்லை.




