நடந்து முடிந்த IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை.

இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அஸ்வின் முதல் இன்னிங்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்கில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்கை ஆடாமலேயே 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் படைத்துளார். அதில் ஒரு குறிப்பிடதக்க சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னமும் ஒரு முறை இப்படி வீழ்த்தினார் இந்தியாவின் ஸ்பின் ஜாம்பவான் அணில் கும்ப்ளேவின் சாதனையை சமன் விடலாம்.

மேலும் ஏற்கனவே 700 விக்கெட்டுகளை கடந்தது, டெஸ்ட் போட்டியில் அப்பாவையும் மகனையும் ஆட்டமிழக்க செய்தது, 8 முறை ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது என பல சாதனைகளை படைத்த அஸ்வின் அணில் கும்ப்ளேவின் இடஙக சதானியையும் முறியடிப்பார் என்று உறுதியாக நம்புகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் அணில் கும்ப்ளே சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அஸ்வின் பற்றி பேசியுள்ளார்.
அணில் கும்ப்ளே கூறியது :
அவர் கூறுகையில் “அஸ்வின் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் மனதுடன் விளையாடுகிறார். இது அவருடைய விளையாட்டு மற்றும் திறமை பற்றி மட்டுமே கிடையாது. அஸ்வின் தனக்கு எதிராக நிற்கும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தை தண்னிடம் இருந்து அப்படியே அவர்களுக்கு மாற்றுகிறார். இதனை நாம் அஸ்வினை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களிடம் காணலாம். அவர்களுடைய உடல் மொழியில் இதே நீங்கள் அதனை புரிந்து கொள்ள முடியும் என்றார் அணில் கும்ப்ளே.

மேலும் பேசிய அவர கூறுகையில் “அஸ்வின் கீரிசுக்கு வெளியில் வந்து பந்துவீசுகிறார். அது வலது கை பேட்ச்மேன்களுக்கு உள்ளே வரும். வலது கை பேட்ஸ்மேன் அந்த பந்து உள்ளே வருகிறது என்று நினைக்கும் அதே வேளையில் அஸ்வின் அற்புதமான பந்துவீச்சில் மூலம் அது நேரடியாக ட்ரிப்ட் ஆகி உள்ளே சென்று ஸ்டெம்புகளை தாக்குகிறது. அதனை நான் சந்தர்பாலு விக்கெட்டில் பார்க்க முடிந்தது என்று தெரிவித்தார் அணில் கும்ப்ளே





