ஐபிஎல் 2023 க்கான 22 லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வந்தார். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபிஎல்லில் பங்கேற்றார். அர்ஜூன் டெண்டுல்கர் தான் மும்பை அணிக்காக முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
Arjun Tendulkar receiving the Mumbai Indians cap from Rohit Sharma.pic.twitter.com/jieLS4bQEQ
— Johns. (@CricCrazyJohns) April 16, 2023
ஆரம்பதிலையே சொதப்பி வந்தனர் கொல்கத்தா அணி.அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். மறுபுறம் தடுமாற்றத்தை சந்தித்த குர்பாஸ் 8 ரன்களிலே வெளியேறினார். அதற்க்கு பிறகு வந்த கேப்டன் ரானாவும் 5 ரன்களிலே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.
யார் வெளியேறினாலும் அதிரடியாகவே விளையாடி 23 பந்துகளில் அரை சதத்தை அடைந்தார். அற்புதமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் யாரும் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதன் முறையாக தன்னுடைய ஐபிஎல் பொடியை ஆடியிருக்கிறார்.

அர்ஜுன் டெண்டுல்கர் :
அர்ஜுன் நீண்ட காலமாக மும்பை அணியுடன் இருந்து வருகிறார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அர்ஜுன் தன்னுடைய வாய்ப்புக்காக பெஞ்சில் வகாத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இறுதியாக ஐபிஎல் 16வது சீசனின் மும்பை ஆடிவரும் நான்காவது போட்டியில் அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார். போட்டிக்கு முன்னர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரோஹித் சர்மா தொப்பியை அணிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வின் போது அர்ஜுன் டெண்டுல்கரின் சகோதரி சாராவும் வந்திருந்தார். அர்ஜுன் தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கும் போது சாரா தன்னுடைய சகோதரருக்காக கைதட்டி ஆரவாரம் செய்தார். அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் 4.98 பொருளாதாரத்துடன் 8 விக்கெட்டுகளையும், 6.60 பொருளாதாரத்துடன் 9 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அவரது சிறப்பு என்னவென்றால், ODI மற்றும் T20 ஆகிய இரண்டிலும் அவரது பந்துவீச்சு இதுவரை சிக்கனமாக இருந்தது. இதன் மூலம் ரஞ்சியில் பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் சிறந்த ஆல்ரவுண்டராக வரலாம் என்று தோன்றுகிறது. முதல் தர கிரிக்கெட்டில் அர்ஜுன் விக்கெட்டுகளைப் பற்றி பேசுகையில், அர்ஜுன் 3.42 பொருளாதாரத்துடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் ஒரு சதம் உட்பட 223 ரன்கள் எடுத்துள்ளார். 120 என்பது அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.





