ரவீந்திர ஜடேஜா உடல்தகுதியுடன் இருந்தால் மீண்டும் அணிக்கு வர வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கருத்து தெரிவித்துள்ளார். IND vs RSA முதல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது.

இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 3 விக்கெட்டுகளையும் கோட்ஸி மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி இந்திய அணிக்கு 164 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.
அதாவது 2வது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக எல்கர் 185 ரன்களும் ஜான்சன் 84 ரன்களும் பெண்டிகம் 56 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அதன் பின் இன்றைய நாளில் 3வது இன்னிங்க்ஸ் விளையாடிய இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. மூன்றாவது நாள் தொடங்கும்போது இந்திய அணி விறுவிறுப்பாக விளையாடி அணிக்கு நல்ல ரன்களை சேர்க்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது முற்றிலும் மாறியது. இதில் ரவிச்சந்திர அஷ்வின் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படவில்லை. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில்,

எனது விளையாடும் லெவன் அணியில் அதிக மாற்றங்கள் இருக்காது. ஜடேஜா உடல்தகுதி அடைந்தவுடன், ரவிச்சந்திரன் அஷ்வின் இழப்பில் மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் ரவிச்சந்திரன் அஷ்வின் முந்தைய ஆட்டத்தில் அரிதாகவே பயன்படுத்தப்படவில்லை, மேலும் புதியவற்றின் அடிப்படையில் மாற்றம் இருக்கலாம். பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் அவரை நான் தேர்வு செய்வேன் என்றும் அவர் கூறியிருந்தார்.





