
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் 13.25 எக்னாமியுடன் விளையாடியாதால் சில ரசிகர்களால் ட்ரோலுக்கும் உள்ளாகினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்திய அணி மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில், ஆறு இன்னிங்ஸ்களில் ஐந்து முறை இரு அணிகள் 200 ரன்களுக்கு மேல் எடுத்ததை நாம் பார்த்து இருப்போம் இரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் 191/9 ரன்தான் குறைந்த ஸ்கோர். திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வலது கை வேகப்பந்து பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசிய னியாளியில் அவர் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இருந்த போதிலும், இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த மூன்றாவது போட்டியில் பிரசித் கிருஷ்ணா t20யில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். கவுகாத்தியில் 222 ரன்களை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா விக்கெட் எதுவும் எடுக்காமல் 68 ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரில் கிருஷ்ணா 21 ரன்களை பாதுகாக்க போராடினார், கடைசி பந்தில் 4 ரன்களை அடித்து மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார்.

இதற்கிடையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா பிரசித் கிருஷ்ணாவுக்கு தனது ஆதரவை வழங்கினார். நீண்ட காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் சர்வதேச அளவில் திரும்பியதில் இருந்து கிரிக்கெட் இல்லாததை சுட்டிக்காட்டினார்.“அதிகமாக கிரிக்கெட் விளையாடாத ஒரு பையனைப் பற்றி நீங்கள் ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள்.

ஆனால் பிரசித் கிருஷ்ணா போன்ற ஒருவரைப் பற்றி பேசும்போது திறமைக்கு பஞ்சமில்லை. அவர் நிச்சயமாக இந்தியாவின் வருங்கால நட்சத்திரங்களில் ஒருவர், இங்கிருந்து அவர் சிறப்பாக வருவார் என்று நம்புவோம், ”என்று நெஹ்ரா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: “பிரசித் கிருஷ்ணா ஒரு நல்ல யார்க்கர் வீசக்கூடியவர். ஈரமான மைதானம் மற்றும் தட்டையான ஆடுகளத்தில் பந்துவீசுவது கடினம் என்று எனக்குத் தெரியும். என்றும் அவர் கூறியிருந்தார்.





