ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார்.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. அந்த வீரர்களையே ஐபிஎல் அணிகள் தற்போது கோடிகளை கொட்டி வாங்கியது. ஒரு வீரருக்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்க கூடாது என்று ரசிகர்கள் ஐபிஎல் அணிகளை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வெளி நாட்டில் இருந்து வரும் வீரர்களுக்கு தான் அதிகம் விலை கொடுப்பது குறித்து தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஷ்வின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை அணியில் நியுசிலாந்து பிளமிங்கும் மும்பை அணிக்கு இலங்கை ஜெயவர்த்தனேவும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள். எனவே தங்கள் நாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டுவதால் இந்திய வீரர்களின் மதிப்பு குறைகிறது என்றும் பலர் அவர்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

இது குறித்து அஸ்வின் கூறுகையில், இது போன்ற வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என்றால் அணியில் எடுக்கும் போது அந்த நான்கு வீரர்களை தவிர வேறு வெளிநாட்டு வீரர்களை அணியின் நிர்வாகம் எடுப்பதில்லை. ஆனால் இங்கு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஏலத்தில் 8 வீரர்களை எடுக்கின்றது. ஆனால் நான்கு வீரர்களை மட்டுமே அணியில் விளையாட வைத்துவிட்டு மீதி 4 வீரர்களை பெஞ்சில் உட்கார வைக்கின்றது.
இதில் பயிற்சியாளர்களுடன் நாட்டை சேர்ந்த வீரர்களை அதிகமான எண்ணிக்கையில் எடுப்பதற்கு அந்தந்த பயிற்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். இது பற்றி நான் வெளியே சொல்ல மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் இது மிகவும் தவறான ஒரு முன்னுரதானமாகும். இது பெயருக்கு இந்திய பிரிமியர் லீக் ஆனால் ஒவ்வொரு அணிக்கும் எட்டு வெளிநாட்டு வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள் அதிலும் ஒரே நாட்டை சேர்ந்த பல வீரர்கள் அணியில் இடம் பெறுகிறார்கள்.
போட்டியின் போது நான்கு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கின்றனர். அவர்கள் மேலும் இந்திய நாடுகளத்தை ஆடுகளம் எவ்வாறு இருக்கின்றது என்று தெரிந்து கொண்டும் வீரர்களின் நிறை குறை பற்றி அறிந்து கொண்டும் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது அதுவே இந்திய அணிக்கு பெரும் ஆபத்தாக மாறி விடுகின்றது. எனவே வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை எட்டிலிருந்து நான்காக குறைக்க வேண்டும் அதேபோல் பயிற்சியாளர்களுக்கு நெருக்கமான வீரர்களை அணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.





