இந்தியாவின் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக இருந்து வருபவர் அஸ்வின். பல நேரங்களில் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு உதவிய அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் அஸ்வினுக்கு வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஆசிய கோப்பையிலும் சரி உலக கோப்பை போட்டியிலும் சரி இவர்க்கு வாய்பபு கிடைக்கவில்லை.
அதற்கு காரணமாக கூறப்படுவது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதினால் தான் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் சமீப காலத்தில் இந்திய அணியில் நுழைந்து தன்னுடைய பேட்டிங் திறமையினால் வரும் உலக கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ள வீரர் தான் இஷான் கிஷான். இந்நிலையில் தான் சமீபத்தில் அஸ்வின் பேசுகையில் இஷான் கிஷான் எவ்வளவு சுயநலமற்றவர் என்பது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்போது இஷான் கிஷான் ஷார்ட்ஸ், வண்ணமயமான சட்டை மற்றும் தங்கச் சங்கிலி அணிந்து வந்தார். அவருக்கு பிறந்த நாள் மற்றும் நாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். சுமார் ஐந்து டேபிள்கள் இருந்தன, அனைத்தும் இந்திய அணி வீரர்கள், உதவி ஊழியர்கள் இருந்தனர்.
பின்னர் நாங்கள் சாப்பிட்டு முடித்து பில் கட்ட கிளம்பும் போது, அனைவருக்கும் இஷான் கிஷன் ஏற்கனவே கட்டணத்தை செலுத்திவிட்டார் என்று எங்களுக்குத் தெரியவந்தது. எனவே, இந்த நாளில், அவரைப் போன்ற ஒரு தன்னலமற்ற நபரைப் பார்ப்பது அரிது. இஷான் கிஷான் ஒரு அசாதாரண டீம் மேன் என்பது கண்ணில் படாத இன்னொரு விஷயம். இந்திய அணியில் இல்லை என்றால் தண்ணீர் கொண்டுவரும் வீரராக பாசிட்டிவ் வைப்ஸ் கலக்குவார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது, அவர்களின் இடது கை வீரர்களில் ஒருவருக்கு விக்கெட்டுக்கு மேல் பந்துவீசிக்கொண்டிருந்தேன், மேலும் நான் அடிக்கடி ஓவர் தி விக்கெட் மற்றும் விக்கெட்டுக்கு மாறிக்கொண்டிருந்தேன். எனவே, இஷான், “நீங்கள் அவருக்கு பந்துவீசும் போது கோணத்தை மாற்றிக் கொண்டே இருங்கள், அவர் விரைவில் அவுட் ஆகிவிடுவார் என்று இஷான் கிஷான் கூறினார்.

அதே போல நான் பந்து வீசிய போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன பிறகு, இஷான் என்னிடம் வந்து இதனை நாட்கள் உங்களுடைய பந்துவீச்சில் விளையாடும் எனக்கே விளையாட முடியவில்லை. அறிமுக வீரரான இவரால் எப்படி விளையாட முடியும் என்று இஷான் கிஷான் சொன்னதாக சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார் ரவிச்சந்திரன் அஸ்வின்



