இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். ஜடேஜா 4 விக்கெட்டையும் இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர்.
இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் க்ராலி 60 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அவர்கள் இன்றைய நாளிலே 145 ரன்னில் அனைத்து விக்கெட் இழந்தனர் இதில் ரவிச்சந்திர அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

மீண்டும் இன்றைய நாளிலே பேட்டிங் செய்வது இந்திய அணி 40 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இதுவரை எதுவும் இழக்காமல் இருந்து வருகிறது. இது குறித்து அஷ்வின் கூறுகையில், நேற்று அவருக்கு (குல்தீப்) கடினமாக இருந்தது, அவர் விரும்பியதை விட சற்று முன்னதாகவே பேட் செய்ய அனுப்பினோம். அவரது பிளாக் நன்றாக இருப்பதாக நான் உணர்ந்தேன், அவர் நிறைய துணிச்சலையும் அமைதியையும் காட்டினார், டிரஸ்ஸிங் ரூமை அமைதியாக வைத்திருந்தார்.
ஜூரலில் இருந்து இது இன்னும் சிறப்பாக இருந்தது என்று நான் நினைத்தேன், அவருடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஒருவருக்கு, அவர் மிகுந்த அமைதியைக் காட்டினார். நீங்கள் விரும்பிய அனைத்து விக்கெட்டுகளையும் நீங்கள் எடுக்கலாம், ஒவ்வொரு முறையும் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும், ஆனால் அணி வெற்றி பெறுவதுதான் சிறந்தது. 4 கடினமான நாட்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும்போது அந்த உணர்வு மிக யதார்த்தமானது.
அந்த உணர்வை நான் நாளை பெற விரும்புகிறேன். ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் நன்றாகத் தொடங்கியுள்ளனர், அவர்கள் நாளை தொடருவார்கள் என்று நம்புகிறேன். குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு அவர் தகுதியானவர். மட்டையால் கூட அவர் டிரஸ்ஸிங் அறையை அமைதியாக வைத்திருந்தார்” என்று அவர் கூறினார்.





