அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடர்ந்து தொடங்க இன்னும் சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியானது நடக்கிறது. மேலும் இந்த போட்டியானது 50 ஓவர்களாக நடப்பதினால் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அதில் கலந்து கொள்ளும் ஆசிய அணிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 5ஆம் தேதி பாகிஸ்தானின் கஃடாபி நகரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதின. ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால் கிட்டத்தட்ட நாக் அவுட் போல நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அதிராடியாக ஆட தொடங்கியது.
இதனால் இலங்கை அணிக்கு நிசாங்கா 41 திமுத் கருணரத்னே 32, குசால் மெண்டிஸ் அதிரடியாக 92 தொடக்க ஆட்டக்காரர்களாக 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல ரன்களை குவித்து அசத்தினார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் பேட்டிங் சொதப்பவே ரன் எடுப்பது குறைந்தது. இருந்த போதிலும் பின்னர் வந்த வெல்லலெகே 33 ரன்களும் மஹீஸ் தீக்சனா 28 ரன்களும் எடுக்க இலங்கை 50 ஓவர்களில் போராடி 291/8 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் 292 எடுத்தால் சூப்பர் 4 க்கு செல்லலாம் என்று களமிறககிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மத்துல்லா குர்பாஸ் 4, இப்ராஹிம் ஜாட்ரான் 7 என தொடக்க வீரர்கள் கௌசன் ரஜிதா வேகத்தில் அவுட்டாக அடுத்து வந்த குலாம் நைப் 27 ரன்களில் பதிரனா வேகத்தில் ஆட்டமிழந்தார். இதனால் 50/3 என தடுமாறிய அந்த அணிக்கு ரஹீல் ஷா கேப்டன் சஹீதியுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 45 (40) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இருந்த போதிலும் அற்புதமாக விளையாடிய முகமது நபி ஆப்கானிஸ்தான் அணிக்கு ரன்களை குவித்தார். இதனால் 18.4 ஓவரில் 121/4 என்ற நிலைமையில் களமிறங்கிய அவர் சரவெடியாக விளையாடி 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 65 (32) ரன்கள் விளாசி 26.3 ஓவரில் 201/5 என்ற நிலைமைக்கு கொண்டு வந்து திருப்புமுனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார். இதனால் மீதம் இருக்கும் அவர்களில் சுலபமான ஆப்கானிஸ்தான் அணியாது வெற்றி பெரும் என்று அனைவருமே நினைத்தனர்.

ஆனாள் கேப்டன் சாகிதி 59 ரன்கள் எடுத்த நிலையில் முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதற்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுகவே சுலபமாக வெற்றி பெற வேண்டிய போட்டியானது மோசமாக மாறியது . இந்நிலையில் தனஞ்செயா வீசிய 38வது ஓவரின் முதல் பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது முஜிப் உர் ரஹ்மான் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.
இதனால் ஆப்கானிஸ்தானை அணி 37.4 ஒவர்களிலேயே ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 298 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் நடப்பு சாம்பியன் இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது. இருந்த போதிலும் வெற்றியடைய நல்ல வாய்ப்பு இருக்கும் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான் அணியால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.




