அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியாது நேபாளத்துக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் எதிர்பார்த்தது போலவே அரை மணி நேரத்தில் வந்த மழை உடனடியாக ஒதுங்கிய நிலையில் 11 (22) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மாவை 5வது ஓவரின் கடைசி பந்தில் ஷாஹீன் அப்ரிடி க்ளீன் போல்ட்டாக்கினார்.
இந்த இக்கட்டான நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கி காப்பாற்றுவார் வ்திர்பார்த்த ஷ்ரேயாஸ் ஐயரை 14 (9) ரன்களிலும், கடந்த சில போட்டிகளாக சொதப்பிவரும் சுப்மன் கில்லும் 10 ரன்களில் அவுட்டாக்கி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்திய அணியானது 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறியது. ஆனால் பின்னர் கூட்டு சேர்ந்த இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினர்.

அணியில் இடம்பெறாத கேஎல் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக வந்த இஷான் கிஷான் தடுமாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் நிலைமையை சமாளித்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதற்கு ஹர்திக் பாண்டியா எதிர்புறம் உதவியதை பயன்படுத்திய அவர் அரை சதமடித்து 3வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தியதால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 82 (81) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

அவருக்கு நிகராக மறுபுறம் அதிரடியாக விளையாடிய பாண்டியாவும் பாகிஸ்தானுக்கு சவாலாக நின்று அசத்தினார். அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரும் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 90 பந்துகளில் 87 ரன்களையும் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்த போதிலும் இந்தியாவை காப்பாற்றி பெருமையுடன் பெவிலியன் திரும்பினார். அதே ஓவரிலேயே மறுபுறம் ஃபினிஷிங் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இறுதியில் பும்ரா 16 ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்கள் வரை தாக்குப் பிடிக்க முடியாத இந்தியா 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹரிஷ் ரவூப், நசீமா ஷா தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்நிலையில் இரண்டாவது இன்னிங் மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ரன்கள் போதுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




