பாகிஸ்தானை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா அணி. உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சின்னசாமி மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்திய அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு கொஞ்சம் கேள்விக்குறியாக நிலையில் தான் இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகமாக திணறினார்கள். இதனால் அதனையும் சரி செய்ய வேண்டிய நிலையில் பாகிஸ்தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அவர்களின் முடிவு சரிதானா என்ற கேள்வியும் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 367 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களையும் குவித்து அணிக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்தனர். அதன் பின் வந்த அனைவரும் சொதப்பிய நிலையில் வெளியேறினர். ஸ்டோனிஸ் 21 ரன்களை அடித்திருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரிடி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும், உசாமா மிர் 1 விக்கெட்டு வீழ்த்தி இருந்தார்.
368 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான்அணிக்கு ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் கிடைத்து இருந்தாலும் அதன் பின் யாரும் அந்த தொடக்கத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக இம்ரான் உல் ஹக் 70 ரன்னிலும், அப்துல்லா ஷபீக் 64 ரன்களையும், ரிஸ்வான் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹேசில்வூட் மற்றும் ஸ்ட்ராக் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்தனர். ஆஸ்திரேலியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் அதன் பின் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை கண்டு சாம்பியன் அணி என்று நிரூபித்து வருகிறது.




