இந்திய அணி 10 வருடங்களாக போராடியும் கோப்பையை பெற முடியாமல் தவித்து வருகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வந்தது.

அதில் இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்ய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பி வந்தது. இதில் முக்கியமாக சிறந்த டெஸ்ட் பௌலர்களில் ஒருவர் அஷ்வின்னை அணியில் எடுக்காமல் இருந்ததை பலர் விமர்சித்து வந்தனர். அஷ்வின் பவுளர் மட்டுமல்லாமல் அவர் நன்றாக பேட்டிங்கும் செய்யும் திறமை வாய்ந்தவர். இந்த போட்டியில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்தும் பலர் விமர்சனம் செய்து வந்தனர். தோனிக்கு பிறகு எந்த ஒரு கேப்டனாலும் icc கோப்பையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்திய அணி 444 ரன்களை எடுத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் நம்பிக்கையுடன் போட்டியை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் நிதனமான தொடக்கமே கிடைத்தது. 18 ரன்களில் ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார் அந்த கேட்சானது மிகவும் சர்ச்சைகுள்ளாகியது. அதன் பிறகு ரோஹித் ஷர்மா 43 ரன்களிலும், புஜாரா 27 ரன்னிலும், அவுட்டாகி வெளியேற இந்திய அணிக்கு மொத்தமாக இருந்த நம்பிக்கை எல்லாம் விராட் கோலி மேல் சென்றது.

விராட் கோலியால் மட்டுமே தான் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என எதிர்பார்த்து இருந்தனர். அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளித்தார். அதாவது 49 ரன்கள் இருத்த நிலையில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறது இந்திய அணிக்கு இருந்த நம்பிக்கை அனைத்தும் சென்று விட்டது. ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு வந்த அனைத்து வீரர்களும் சொதப்பியே வெளியேறினர்கள்.

ரஹானே 46 ரன்களிலும், தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட் இழந்து வெளியேறினார். உமேஷ் யாதவ் 1 ரன்னிலும், பாரத் 23 ரன்களிலும், சிராஜ் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதனால் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.





