சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எப்படி விராட் கோலியோ அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தற்போதய காலங்களில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அசாதாரணமான திறமைகளை காட்டி வருகிறார் பாபர் அசாம். மறுபுறம் ஒரு காலத்தில் எந்த பந்து போட்டாலும் அதிரடியாக விளையாடி ரன் மெஷின் என பெயர் எடுத்த கோலி தற்போது விளையாடுவதற்கு தடுமாறி வருகிறார்.

சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. இதனிடையே பாபர் அசாம் தற்போது சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
அப்படி அந்த 2 வீரர்கள் மீது அனைவருமே எதிர்பார்ப்பும் ஒப்பீடுகளையும் வைத்திருந்தாலும் அவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். சொல்லப்போனால் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்று பலர் விமர்சித்த போது “இதுவும் கடந்து போகும் பொறுமையாக காத்திருங்கள்” என்று பாபர் அசாம் ட்வீட் போட்டு கொடுத்த ஆதரவை தெரிவிக்க.அதே போல 2022 ஆசிய கோப்பைக்கு முன்பாக பாபர் அசாமை நேரில் சந்தித்து அதற்காக விராட் கோலி கை கொடுத்து நன்றி தெரிவித்ததும் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அத்துடன் தற்சமயத்தில் பாபர் அசாம் உலக அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் டாப் பேட்ஸ்மேன் என்று சமீபத்தில் விராட் கோலி ஐசிசி இணையத்தில் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். இந்த நிலையில் தான் விராட் கோலியை சந்தித்து பேசியது குறித்து பாபர் அசாம் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “விராட் கோலியை 2019 உலகக் கோப்பையில் பார்த்த போதிலிருந்தே இப்போதும் அவர் உச்சத்தில் தான் இருக்கிறார். அந்த சமயத்தில் நான் அவரை சந்தித்து சில கேள்விகளை கேட்ட போது அதற்கு அவர் தெளிவான விளக்கங்களை கொடுத்தார். அதன் வாயிலாக நான் நிறைவற்றை கற்றுள்ளேன். எனவே என்னைப் பற்றி அவரை போன்ற ஒருவர் அப்படி தெரிவிக்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிலும் விராட் கோலி போன்ற ஒருவர் பாராட்டுவது பெருமைக்குரிய அம்சமாகும். அவர் என்னை பற்றி சொல்லியது இன்னும் எனக்குள் அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் பாபர் அசாம். இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பை போட்டி தொடங்கிய நிலையில் விராட் மற்றும் அசாமிற்கு இடையே யார் அதிக ரன்களை விளாசுவார்கள் என்ற கேள்வியானது தற்போது சோசியல் மீடியாவில் எழுந்துள்ளது.




