அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

குறிப்பாக விராட் கோலியாவது 2021 டி20 உலக கோப்பையில் அவரை சிறப்பாக எதிர்கொண்டு 51 ரன்களும் 2022 டி20 உலக கோப்பையில் 82* ரன்களும் எடுத்து சிறப்பாக செயல்பட்ட நிலையில் இப்போட்டியில் துரதிஷ்டவசமாக இன்சைட் முறையில் அவுட்டாகி சென்றார். ஆனால் 2021, 2022 டி20 உலக கோப்பைகளில் அவரிடம் பெட்டி பாம்பாக அடங்கிய ரோகித் சர்மா இம்முறையும் கொஞ்சம் கூட பெரிய பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் க்ளீன் போல்ட்டானார்.

அப்போது ரோஹித் சர்மா அவுட்டான விதம் பிரபல சென்னை 600028 தமிழ் திரைப்படத்தில் சிறுவர்களுடன் கடற்கரை ஓரத்தில் கிரிக்கெட் விளையாடும் போது சிவா “அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் கிளீன் போல்ட்டான ஷாட்டை” போல் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ட்விட்டரில் ஓப்பனாக கலாய்த்துள்ளார்.
Too identical (the shot I meant 😂) #JustforFun #INDvPAK pic.twitter.com/XB0LhWHlxM
— S.Badrinath (@s_badrinath) September 2, 2023
ஏற்கனவே பார்ப்பதற்கு தமிழ் நடிகர் சிவா போல் இருப்பதால் பலமுறை அவருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்ப்பது வழக்கமாகும். அந்த வகையில் இதுவும் ஒரு ட்ரோலாக அமைந்தது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து தற்போது கேப்டனாகவும் இருக்கும் ரோஹித் ஷர்மாவை கலாய்க்க என்ன தகுதி இருக்கிறது என்று பத்ரிநாத்தை விமசித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.




