உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 40வது போட்டியை பூனேவில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதின. உலக கோப்பை 2023 லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அனைத்து அணிகளும் தங்களது நிலையை உறுதிப்படுத்தினர்.

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணியும் அரை இறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பு இருந்துவிட்ட நிலையிலும் தங்களது போட்டி அவர்கள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் விளையாடி வருகின்றனர். என்னதான் இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் ஆக இருந்தாலும் இந்த உலக கோப்பை எட்டு போட்டியில் நேற்றைய போட்டி சேர்த்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி ஏழாவது இடத்தில் இருந்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அது அவர்களுக்கு நன்றாகவே கை கொடுக்க. 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 339 ரன்களை குவித்து இருந்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பென்ஸ் ஸ்டோக்ஸ் 108 ரன்களும் டேவிட் மலான் 87 ரன்கள் கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும் குவித்திருந்தனர். நெதர்லாந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சற்று சுமாராகவே தான் இந்த போட்டியில் பந்து வீசி வந்தன. லீட் 3 விக்கெட்டுகளையும் ஆரியன் தட் மற்றும் பீக் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மீக்ரம் ஒருவிக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இங்கிலாந்து அணி 50 அவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்து இருந்தந்து.

340 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய நெதர்லாந்து அணி 37.2 அவர்களின் அனைத்து விக்கெட் களையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 41 ரன்களையும் எட்வர்ட் 38 ரன்களையும் வெஸ்லி பாரேசி 37 ரன்களை மட்டுமே குவித்திருந்தனர். மொயின் அலி மற்றும் ஆதில் ரஷித் தலா மூன்று விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி இரண்டு விக்கெட்டுகளையும் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தனர். எனவே நெதர்லாந்து அணி போட்டியில் தோல்வி தழுவி பத்தாவது இடத்தில் இருந்து வருகிறது.தோல்வி குறித்து நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் கூறுகையில்,

இந்த போட்டி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பந்து வீச்சில் சரியாகத் தொடங்கவில்லை. பந்துவீச்சாளர்கள் அதை நன்றாக பின்னுக்கு இழுத்தனர், ஆனால் இங்கிலாந்து வீரர்கள சிறப்பாக விளையாடினர்.பேட்டிங்கில் அதே போலே பழைய கதையாக இருக்கின்றது. ஒரு நல்ல விக்கெட், நாங்கள் சில விஷயங்களை முயற்சித்தோம் ஆனால் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். துரத்தும்போது பேலன்ஸ், பவர்பிளேயில் சில ரன்கள் எடுக்க வேண்டும் ஆனால் நடுவில் விக்கெட்டுகள் தேவை. நாங்கள் அதைப் பற்றி பேசுவோம், மேலும் சிறப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்போம். கேட்ச்களில் நாங்கள் நன்றாக இருக்கிறோம், நீண்ட காலமாக அதைச் செய்ய வேண்டும். பெங்களூரில் ஒரு அற்புதமான சூழ்நிலை இருக்கும், அதை எதிர்நோக்குகிறோம் என்றும் அவர் கூறியிருந்தார்.



