2024 T20 உலக கோப்பை போட்டி ஆனது இந்த வருடம் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி ரசிகர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்றால் அணியில் இருந்து விராட் கோலியை நீக்குவதற்கு இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் முக்கிய வீரர்கள் ஆன ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி 20 அணியில இடம் பெறவில்லை.

அதன் பின்பு நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் டி20 அணியில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களை இந்திய அணியின் நிர்வாகம் மீண்டும் T20 அணியில் சேர்த்தது. அதில் ரோகித் சர்மா அந்த வாய்ப்பு சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லலாம். முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறினாலும் அதன் பின்பு அவர் சதம் அடித்து ஆட்டத்தை நிரூபித்து விட்டார். ஆனால் விராட் கோலி முதல் போட்டியில் 29 ரன்களும் மற்றொரு போட்டியில் டக் அவுட்டாகி அவர் வெளியேறினார்.

எனவே அவர் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மெதுவாக விளையாடுகிறார் என்றும் 2024 T20 கோப்பையில் அவர் அணியில் இருந்து நீக்குவதாகவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் இணையத்தில் வெளியாகும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலியின் அணியில் சேர்த்தால் தற்பொழுது இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் இந்திய இளம் வீரர்களை வ=சிவம் துபே மற்றும் திலக் வர்மாவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.

மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வருகிறது. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும் ஐபிஎல்லில் அவர் தன்னுடைய ஆட்டத்தை நிருபித்தால் அவரை இந்திய அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.





