வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மூன்றவது போட்டியிலும் வெற்றி பெற நம்பிக்கையுடன் களமிறங்கியது. அதே நேரத்தில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிவிட கூடாது என்று இங்கிலாந்து கடுமையாக போராடி பின்னர் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந்து அணிக்கு மிகவும் தேவையான ஒரு வெற்றி என்றே சொல்லலாம்.

தோனி சாதனை முறியடிப்பு :
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தோனியின் ஒரு சாதனையை முறியடித்துளார். அதாவது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியானது 251 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது. இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 5 வெற்றிகரமாக 250+ ஸ்கொரை துரதியவர் என்ற பட்டியலில் 5 முறை வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.
அந்த பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 4 முறை வெற்றிகரமாக 250+ ஸ்கொரை துரத்தியுள்ளது. இவருக்கு கீழே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 3 வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதனிடையே போட்டி முடிந்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுத்த வோக்ஸ் மற்றும் மார்க் வூட்டை பாராட்டி பேசினார்.

பென் ஸ்டோக்ஸ் பேட்டி :
அவர் கூறுகையில் “மற்றொரு நெருக்கமாக போட்டி, இந்த போட்டியில் வெற்றி பெற்று எங்களுடைய நம்பிக்கையை உயிரிடன் வைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டாஸை வென்றோம், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டோம். விக்கெட்டும் நன்றாக இருந்தது. அஸ்திரேலிய அணியின் மிச்சில் மார்ஸ் உள்ளே இறங்கி சிறப்பாக விளையாடி ஆட்டத்தை அவர்கள் பக்கம் கொண்டு செல்ல முயன்றார். மைதானமும் பந்து வேகமாக செல்லும் படியாக இருந்தது.

எங்களுடைய அணியின் மார்க் வுட் மற்றும் வோக்ஸ் மீண்டும் திரும்ப வந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்களுடைய விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் படியான வீரர்களை தேந்தெடுக்கிறோம். வோக்ஸ் இவ்வளவு காலமாக டெஸ்ட் விளையாடவில்லை என்பதை நான் உணரவில்லை. அவர் MR.Consistent, அவரை போல ஒருவரை அணியில் 8வது இடத்தில் வைத்திருப்பது எங்களுக்கு உதவியது. அவர் இதே போன்று அடித்த போட்டிகளிலும் விளையாடுவார் என்று நம்புகிறேன் என்றார் பென் ஸ்டோக்ஸ்.
நான்காவது போட்டி :
இதனிடையே ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியானது வரும் ஜூலை 19 முதல் 23 நாட்களில் மான்செஸ்டர் நகரில் உள்ள மைத்தனத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெரும் பட்ச்சத்தில்ம், அதற்கு அடுத்த போட்டியானது இந்த ஆண்டின் சுவாரசியமான போட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.





