வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் மற்றும் பேன் டக்கட் இருவரும் இணைந்து 50 பார்ட்னர்ஷிப் கொண்டவர பின்னர் பென் டக்கட் 41(41) ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பிறகு தான் இங்கிலாந்தின் சரிவு ஆரம்பமானது.

இவர்க்கு பின்னர் ஜாக் கிராலி 22(37) ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ஜோ ரூட்டும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆட்டமிழந்தார். இதனால் ஒருகட்டத்தில் 73 ரன்களுக்கு 3 விக்கெட் என தடுமாறியது இங்கிலாந்து. பின்னர் ஜோடி சேர்ந்த மெயின் அலி மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் திறமையாக விளையாட ஹாரி ப்ரூக் 50(44) அரை சதம் விளாசினார். இவர்கள் இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப்பை கொண்டு சென்றாலும் மெயின் அலி 34(47) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி ஒரு பக்கம் விக்கெட்டுகளாக விழுக திறமையாக விளாடிய ஹாரி ப்ரூக் 85(91) ரன்களின் போது ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்க் வுட் 28(29) ரன்களிலும் , கிரிஸ் வோக்ஸ் 26(32) ரன்களிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனையடுத்த களமிறங்கிய அஸ்திரலியாவின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 47(157) என ஆட்டமிழக்க டேவிட் வார்னர் துரதிஷ்டவசமாக மீண்டும் குறைவான ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்து மரன்ஸ் 9(82) ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 4(5) ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தாலும், பொறுமையான விளையாட்டை விளையாடிய ஸ்மித் 71(123) ரன்களை விளாசினார். இவரை தவிர பாட் கம்மின்ஸ் 36(86) ரன்களிலும் டாட் மர்பி 34(39) ரன்களை தவிர யாரும் பெரிதாக ரன்கள் அடிக்காத நிலையில் ஆஸ்திரேலியா 103.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே அடித்தது.
What a way to finish the day! 😮
— England Cricket (@englandcricket) July 28, 2023
A stunning grab from the captain brings Day 2 to a close 👏
Australia lead by 1️⃣2️⃣ at the end of the first innings…#EnglandCricket | #Ashes pic.twitter.com/EdsUjrfmk7
இந்நிலையில் இந்த போட்டியின் முடிவின் போது 103 வது ஓவரில் பாட் கம்மின்ஸ் விளையாடி கொண்டிருக்க ஜோ ரூட் பந்து வீச வந்தார். அப்போது பாட் கம்மிஸ்ன் லாங் ஆன் திசையில் அடிக்க அது நேரடியாக பவுடரியை நோக்கி மேலே பறந்தது. அந்த நேரம் பார்த்து பவுண்டரி பக்கத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் அந்த கேட்சை பிடித்தார். ஆனால் கேட்சு பிடித்து படுமாறிய அவர் தான் பவுற்றிக்கு வெளியே செல்ல போகிறோம் என்று நினைத்தும் பந்தை மைத்தனத்திற்குள் தூக்கி எரிந்து, பின்னர் மிண்டும் உள்ளே வந்து கேட்சை பிடித்தார். அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது





