உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது.இதனால் வரும் காலங்களில் இவருக்கு பிறகு பார் இவருடைய இடத்தை இந்திய அணியில் பூர்த்தி செய்வார்கள் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இருக்கிறது.
மறுபுறம் சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் மந்தமான செயல்திறனை காட்டும் கோலி மீது அதிக விமர்சனங்கள் வருகின்றனர். குறிப்பாக டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இவரை நீக்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை, அவர் 2024 உலக கோப்பையில் இடம் பெறுவாரா என்ற கேள்வியையும் பல இந்திய ஜாம்பவான்கள் வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டா வசமாக விராட் கண்டிப்பாக பங்குபெறுவார் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் விராட் கோலி என்றாலே பலருக்கும் நியாபகம் வருவது அவருடைய அசாதாரணமான ஷாட்டுகளும், ஆக்கிரோஷமாக் மைத்தனத்தில் இருப்பதும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும் தான். கிட்டத்தட்ட பல வீரர்கள் ஓய்வு எடுத்தாலும் கூட ஏபோதாவது தான் இவருக்கு காயமோ அல்லது விருப்பப்பட்டு ஓய்வு எடுப்பார். சொல்லப்போனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் RCB விளையாடிய கடைசி ஆட்டத்தில் சிறிய காயம் ஏற்பட்டபோது அதற்கு சில நாட்கள் கழித்து உலக சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடினர்.
இப்படி கிரிக்கெட்டில் பிட்டாக இருப்பதில் பல வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் விராட் கோலி. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமார் விராட் கோலி குறித்து சில வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்படி அவர் பேசுகையில் “விராட் கோலி மட்டும் கிரிக்கெட் வீரராக வரவில்லை என்றால் அவர் ஒரு குத்துசண்டை வீரராக வந்திருப்பார் என்றார்( சிரிக்கிறார் ).

மேலும் பேசிய புவனேஷ்வர் குமார் கூறுகையில் “விராட் கோலி எப்போதும் தன்னை அணியில் சிறந்த பந்து வீச்சாளர் என்று நினைத்து கொள்வார். அதனால் நாங்கள் எப்போதுமே அவருடைய பந்துவீச்சு சைகையால் காயம் ஏற்பட்டு விடப்போகிறது என்று கவலை படுவோம் என்றார் புவனேஷ்வர் குமார். இந்நிலையில் புவனேஷ்வர் இந்திய அணியில் சில காலம் இடம்பெறாத நிலையில் இனி மீண்டும் இந்திய அணிக்குள் வர வாய்ப்பு மியாகவும் குறைவு என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.




