இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. அதற்க்கு இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் சாவ்லா கருத்து தெரிவித்து இருந்தார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விறாட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா கட்டயாம் அணியில் உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சாவ்லா கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

கோலியும் ரோஹித்தும் வேறுவிதமாக யோசித்துக்கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அதை வித்தியாசமாகப் பார்க்கலாம். அவர்கள் உண்மையிலேயே உலகக் கோப்பையை வெல்ல ஏதாவது சிறப்பாக செய்ய விரும்புகிறார்கள். ஏனென்றால் நீங்கள் களத்தில் இறங்கிய பிறகு, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்காமல், தற்போதைய சூழ்நிலையில் வாழ்கிறீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால், நெருக்கடியான சூழ்நிலைகளில் அனுபவம் முக்கியமானது என்று நான் கூறுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.





