உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஒரே ஒரு வெற்றியை தான் பெற்று இருந்தார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிக்கும் இருந்தது. அதில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அவர்கள் சற்று தடுமாறி விளையாடவே ரன்கள் மெதுவாக அந்த இடத்தில் குறைந்தது. ஆனால் ஆதன் பின் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே பெங்களூரு அணி 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது. ஆரம்பத்தில் விராட் கோலி அதிக அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்3ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 8 ரன்னில் வெளியேற அதன் பின் வந்த படிதார் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 26 பந்துகளில் 61 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதன் பின் டு பிளசிஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் எந்த வீரரும் இரண்டிலக்க ரன்களை கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 53 ரன்களை அவர் அடித்து இருந்தார். அவரது ஆட்டம் காரணமாக தான் பெங்களூரு அணி 196 ரன்களை குவிக்க முடிந்தது.

மும்பை அணியின் தொடக்கம் முதலே பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனவே அவர்கள் 197 இலக்கை 15.3 ஓவர்களிலே அடித்து முடித்து விட்டனர். அதில் வந்த அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களும் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் ஹர்திக் பாண்ட்டியா 6 பந்துகளில் 21 ரன்களையும் திலக் வர்மா 10 பந்துகளில் 16 ரன்களையும் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி இது போன்ற மோசமான பந்து வீச்சாளர்களை வைத்து கொண்டால் 196 அல்ல 296 ரன்களை அடித்து இருந்தாலும் பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியாது.
போட்டி குறித்து பும்ரா கூறுகையில், இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சி. நான் ஒரு ஐந்துக்கு எடுக்க வேண்டும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். அணியின் வெற்றிக்கு பங்களிப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வடிவத்தில் பந்துவீச்சாளர்களுக்கு இது மிகவும் கடுமையானது.இன்று முதல் 10 ஓவர்களில் விக்கெட் எங்களுக்கு சாதகமாக இருந்தது. கேட்ச்கள் கைக்கு சென்றது. எப்போதும் யார்க்கரை மட்டும் வீச கூடாது. இதுபோன்ற ஆடுகளம் t20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்காது. எனவே நாம் அனைத்து வகையான திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
Bumrah said "Whenever I have bad days, I watch videos the next day to see what didn't work, why it didn't work because bowling is tough, you will have to take a beating". pic.twitter.com/OcblU0FQMU
— Johns. (@CricCrazyJohns) April 11, 2024
ஒவ்வொருவரை பற்றியும் வீடியோ மூலம் நிறைய ஆராய்தல் வேண்டும் நான் ஒரு நாளில் கடினமான போட்டியில் ரண்களை வாரி வழங்கினால் பின் நாட்களில் அந்த வீடியோக்களை பார்த்து நான் அதை சரி செய்து கொள்வேன் உங்களுடைய உங்களுடைய இருக்கும் அனைத்து பந்து வைத்து திறமையும் ஒரே நாளில் உங்களால் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது நீங்கள் 1047 கிலோ மீட்ட வேகத்தில் பந்து வீசக்கூடியவராக இருந்தாலும் அந்த அளவிற்கு வீசாமல் அன்றே நாளில் விக்கட் இருக்கு ஏற்றால் மெதுவாக பந்து வீசினால் சரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்




