
T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி உலகக்கோப்பை பின் 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் இந்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் அவர் அணியில் இருப்பாரா இல்லையா என்பது கேள்வி கூறியாக இருந்து வருகிறது.

இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்து வந்துள்ளது. இந்திய t20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்று முன்னால் இந்திய வீரர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஜெய் ஷா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
டி20 அணியில் இடம் பெறுவது குறித்து ரோஹித்துக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். கடந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் டி20 ஐ விளையாடவில்லை, அவருக்கு பதில் இந்திய அணியை ஹர்திக் பாண்டிய வழிநடத்தி இருந்தார். அவருக்கு காயம் ஏற்படவே ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு எதிரான டி20 தொடர்கள் உள்ளன, நாங்கள் நல்ல முடிவை எடுப்போம் என்று ஜெய் ஷா கூறினார். ஹர்திக்கின் உடற்தகுதி குறித்த அப்டேட்டையும் ஷா வழங்கினார். “பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள அவர் திரும்புவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரை மருத்துவ பணியாளர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பே அவர் உடல்தகுதியுடன் இருக்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.





