உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த நிலையில அதன் பின்னதாக ஆஸ்திரேலிய அணி ஐந்து தொடர் கொண்ட டி20 போட்டியில் மோதியது. அதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வந்தது.

அதில் முதல் போட்டி சில நாட்களுக்கு முன் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டுவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்தது. அதில் இன்று மூன்றாவது போட்டியை தென்னாப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்கா அணி ஆதிக்கத்தை செலுத்தியதால் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 2௦ ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களும் ஜெய்ஸ்வால் 60 ரன்களும் ரின்கு சிங் 14 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் வில்லியம்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷம்சி மற்றும் பர்கர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாறி வந்த நிலையில் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்னில் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக மில்லர் 35 ரன்களும் மார்க்கரம் 25 ரன்களும் டோனோவன் ஃபெரேரா 12 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இறுதியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் அடித்த தனிப்பட்ட ரன்னை கூட எட்டமுடியாமல் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,

“நான் நன்றாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது, அதனால் அது அவ்வளவு சீரியஸாக இல்லை. சதம் அடித்தது அற்புதமாக இருந்தது, அதிலும் குறிப்பாக வெற்றிக்கான காரணத்திற்காக அது வரும்போது. நாங்கள் டிக் செய்ய விரும்பிய ஒரு பாக்ஸில் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாடுவோம். உண்மையில் மகிழ்ச்சி வீரர்கள் அதிக குணாதிசயங்களை வெளிப்படுத்தினர். குல்தீப் சிறப்பாக பந்து வீசியிருந்தார். ஒரு சரியான பிறந்தநாள் பரிசு.”




