ஐபிஎல் 2023 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னமும் 4 போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. அதில் ஒரு முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத்தை டைட்டஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் எந்த அணி வெற்றியடைகிறதோ அது நேரடியாக பைனல் போட்டிக்கு செல்லவும். மறுபுறம் தோல்விடைந்த அணி இரண்டாவது வாய்ப்பாக எலிமினேட்டர் தொடரில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.

இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலையில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது நல்ல தொடக்கம் தாம். அதனை ருதுராஜ் மற்றும் கான்வே இந்த சீசனில் பல போட்டிகளில் சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் கான்வே ஆரஞ்சு நிற தொப்பிக்கும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடிவரும் கான்வே குறித்து முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.
சைமன் டவுல் கூறியது :
அவர் கூறுகையில் “கான்வே ஐபிஎல்லில் 21 ஆட்டங்களில் 140 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 50 ரன்கள் சராசரியாக இருக்கிறார். அவை நம்பமுடியாத எண்ணிக்கைகள். கான்வே எடுத்த ரன்கள் மிகவும் அற்புதமானது. அவர் கிளாசிக்கல் கிரிக்கெட் ஷாட்களுடன் சரியாக விளையாடுகிறார். அவர் ஒரு மிகைத்திறமையான நல்ல கிரிக்கெட் வீரர். அவர் சுழற்பந்து வீச்சாளர்களை லாபகரமாக விரைவாகவும் விளையாடுகிறார்.

சென்னைக்கு எப்போதுமே அப்படிப்பட்ட வீரர்கள் உண்டு. ஷேன் வாட்சனாக இருந்தாலும் சரி, மைக்கேல் ஹஸ்ஸியாக இருந்தாலும் சரி. நீங்கள் அவர்களைப் பார்த்தாலே திறமையான வீரர்கள் என்று சொல்வீர்கள். ஆனால் அவர்கள் டி20 போட்டிகளில் அடித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் கிடையாது. குறிப்பாக ஹஸ்ஸி. ஃபஃப் டு பிளெசிஸ் இருந்தபோது அப்படி அதிரடியாக அடித்து விளையாடுவார் என்று நினைக்கவில்லை.
ஆனால் சென்னை அணியில் இவர்களை போல எப்போதுமே ஒருவர் இருக்கிறார். கான்வே அவர்களில் மற்றொருவர் என்றார் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் டவுல்

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான அவரது அற்புதமான அரை சதத்தின் மூலம், கான்வே இப்போது ஐபிஎல் 2023 ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் 14 ஆட்டங்களில் 585 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். நான்கு முறை சாம்பியனுக்கான மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக, சென்னை ஐபிஎல் 2023 இன் குவாலிஃபையர் 1 லும் அவரது சேவைகளைச் சார்ந்து இருக்கும்.





