சென்னை அணி CEO தற்போது சென்னை அணி குறித்து ஒரு அப்டேட்டை கொடுத்து இருந்தார். ipl2024க்கான ஏலமானது துபாயில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. இதில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சென்னை அணியில் இணைந்தார். அவரை சென்னை அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருந்தது. மேலும் நிறைய இந்திய வீரர்களையும் எடுத்து இருந்தது சென்னை அணி.
ஐபிஎல் 2023 இன் போது தோனியின் கடைசி சீசன் என்று பெரிய ஊகங்கள் இருந்தன. இருப்பினும், 6 கோப்பையை வென்ற பின் தான் ஓய்வை அறிவிப்பார் என்றும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் அவரது முழங்காலில் ஒரு பிரச்சினை இருப்பதாக ஒப்புக்கொண்டார்.இது குறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில், “அது எனக்குத் தெரியாது. கேப்டனைப் பொறுத்த வரையில் அவர் உங்களுக்கு நேரடியாகப் பதில் சொல்வார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று அவர் சொல்லவில்லை, அவர் இப்போது நன்றாக இருக்கிறார.

அவர் தனது மறுவாழ்வைத் தொடங்கினார். அவர் வேலை செய்யத் தொடங்கினார். ஜிம்மில், இன்னும் 10 நாட்களில் அவர் வலைகளிலும் வேலை செய்யத் தொடங்குவார்.”கடந்த சில ஐபிஎல் சீசன்களில் தோனி பேட்டிங்கில் சிரமப்பட்டாலும், அவரது கேப்டன்சி சிறப்பாகவே இருந்தது. மஞ்சள் ஆர்மி இந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு, மும்பை இந்தியன்ஸுடன் இணைந்து அதிக வெற்றிகரமான ஐபிஎல் அணியாக மாறியது.
“எங்கள் இலக்குகள் அனைத்தையும் நாங்கள் மிக அதிகமாகப் பெற்றுள்ளோம் என்று நான் கூறுவேன். நாங்கள் டேரில் மிட்செலுக்காகத் திட்டமிட்டோம். முஸ்தாபிசுர் ரஹ்மான் எங்கள் சேப்பாக்கம் விக்கெட்டில் சிறப்பாக பந்து வீசுவார் என்று நாங்கள் நினைத்தோம். இவை எங்கள் எண்ணங்கள், ஆனால் எங்களுக்கு அது உறுதியாகத் தெரியவில்லை. அவற்றைப் பெற முடியும். அதிர்ஷ்டவசமாக, இந்த முறை இது எங்களுக்கு ஒரு நல்ல ஏலமாக மாறியது.”

“சமீர் ரிஸ்வி பல உரிமையாளர்களுக்கு இலக்கான வீரராக இருந்தார். ரிஸ்வியைப் பெறுவதில் நாங்கள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். அடிப்படையில், நீங்கள் அதைப் பார்த்தால், அம்பதி ராயுடுவுக்கு மாற்றாக நாங்கள் முயற்சி செய்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.




