
சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் போட்டி போட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து இருந்தது.அதில் சென்னை அணி வீரர்களை ஏலம் எடுத்தது குறித்து சென்னை அணியின் CEO காசி விசுவநாதன் சில கருத்துக்களை கூறியுள்ளார். ஐபிஎல் பொறுத்தவரை அதிக அளவில் கோப்பைகளை வென்ற அணி என்று பார்த்தால் அது சென்னை அணி மற்றும் மும்பை அணி தான். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் பெங்களூரு அணி இது வரை ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை. இந்த இரண்டு அணிகளுக்கும் இருக்கும் ரசிகர்கள் பலத்திற்கு பெங்களூரு அணிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் பலம் உள்ளது. சென்னை அணியின் கேப்டனாக நீண்ட ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அதே போல் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா பதவிஏற்பதற்கு முன்பு வரை மும்பை அணி ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை. அவர் கேப்டனாக பதவி ஏற்ற பின் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு மும்பை அணி அவரை கேப்டன் பதவியில் இருந்து விளக்கியது. தற்போது ஹர்திக் பாண்டிய மும்பை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். நேற்று முன் தினம் நடந்த ஏலம் குறித்து பார்த்தால் சென்னை அணி சில முன்னனி வீரர்களையும் ஏலத்தில் எடுத்து இருந்தது. இதில் சென்னை அணி அதிகபட்சமாக டேரில் மிட்சல் 14 கோடிக்கு சென்னை அணி அவரை வாங்கியிருந்தது.மேலும் சமீர் ரிஸ்வி (8.4 கோடி) ஷர்துல் தாக்கூர் (4 கோடி) ரச்சின் ரவீந்திரா (1.8 கோடி)

முஸ்தாபிசுர் ரஹ்மான் (2 கோடி) அவனிஷ் ராவ் ஆரவெல்லி (20 லட்சம்) ஏலம் எடுத்து இருந்தது. இது குறித்து தற்போது சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் அணி தேர்வு மற்றும் கேப்டன் தோனி என்ன கூறியுள்ளார் என்றும் தற்போது காசி விசுவநாதன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த வருட ஏலத்தில் எங்களுக்கு நல்ல நல்ல வீரரர்கள் எங்களுக்கு கிடைத்தார்கள்.தலைவருக்கு வேண்டிய அதாவது அவர் எந்த எந்த வீரர்கள் அணிக்கு வேண்டும் என்று கேட்டார்களோ அந்த வீரர்கள் எல்லாம் எங்களுக்கு கிடைத்தார்கள்.
Post Auction Reflections with our Kasi Sir! 🥳⏪#ThalaivanIrukkindraan pic.twitter.com/4NyMcgydU2
— Chennai Super Kings (@ChennaiIPL) December 20, 2023
அது தான் எங்களுக்கு ஒரு அதிர்ஷடம். இந்த வருடமும் நான் நன்றாக செயல்படுவோம் என்று நான் நினைக்கிறேன். நான் எப்போதும் சொல்வது ஒன்று தான் தலைவன் இருகின்றான். எனவே இந்த வருடமும் நல்ல முடிவு வரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. தலைவனே வந்து விளையாடுவது அவர்களுக்கு பெரும் ஆனந்தமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் அவருக்கு பிடித்த வீரர்களும் இருகின்றார்கள். இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.





