உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்ட நிலையில் எந்த அணி இந்த உலக கோப்பையில் வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு உலக ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த உலக கோப்பையில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கும்.

ஏனென்றால் கடந்த 10 வருடங்களாக எந்த ஐசிசி கோப்பையும் கிடைக்காத நிலையில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் தோல்வியை தழுவியது இந்தியா. இதனால் இந்த போட்டி இரண்டாவது வாய்ப்பாக பார்க்கப் படுகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்ற கேள்வி பல கிரிக்கெட் ஜாம்பவான்களிலும் கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் வெஸ்ட் இண்டீன் வீரரும், ஐபிஎல் போட்டியில் விரேட் கோலியுடன் பல காலம் பயணம் செய்தவருமாகி அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சமீபத்தில் கொடுத்த பல பேட்டியில் இந்திய அணியையும், விராட் கோலியை பற்றியும் பல கருத்துகளை கூறியுள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் கொடுத்த போட்டியில் 2023உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது “உலக கோப்பை 2023 போட்டியில் யார் வெல்வார்கள் என்று எனக்கு உறுதியாக கூற முடியாது. ஆனால் தொடரில் கண்டிப்பாக இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலக கோப்பை போட்டிங்களில் தொடரில் நல்ல செயல்திறனை காட்டிவரும் நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அவர்களை விட ஆஸ்திரேலியாவையே தான் நம்புவதாகவும் கூறினார் கிறிஸ் கெயில்.

மேலும் இந்தியாவை பற்றி பேசிய கிறிஸ் கெயிலிடம் வரும் உலக கோப்பை 2023ல் இந்தியாவிற்கு முக்கியமான வீரர்களாக இருப்பர்வர்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இந்தியாவின் சிறந்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியும் கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் என்று வித்தியாசமாக பதிலளித்தார்.

இந்தியாவின் சிவேகப்பந்து வீச்சாளரான பும்ரா சமீபத்தில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து அவர் தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் வரும் ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு இருந்தாக கூறப்படுகிறது. மறுபுறம் சூரிய குமார் யாதவின் ஒருநாள் போட்டிகளின் செயல்திறன் அவ்வளவு நன்றாக இல்லை. கந்த ஆஸ்திரலியா தொடரிலும் சேர்ப்ப ரன்களில் வெளியேறிய நிலையில் இவரையும், பும்ராவையும் கிறிஸ் கெயில் 2023 உலக கோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் என்று கூறியது பிறருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




