ஐபிஎல் வரலாற்றில் மிகவும் முக்கியமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். அதற்கு முக்கிய காரணம் தோனி சென்னை அணியில் இருப்பது. சென்னை அணிக்கும் ஒருவேளை வேறு ஒருவர் கேப்டனாக வந்திருந்தால் இந்த வரவேற்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எப்பேர்ப்பட்ட போட்டியாக இருந்தாலும் தோனி இருந்தால் கடிப்பாக வெற்றியடையும் என்ற எண்ணம் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அதனாலேயே இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவராக இருக்கிறார். ரசிகர்கள் தோனியின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றனரோ அந்த அளவிற்கு ரசிகர்களின் மீதும் தோனி அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறார். எந்த போட்டியாக இருந்தாலும் தோனி ரசிகர்களுக்கு நன்றி கூறுவதை எப்போதும் தோனி மறப்பதில்லை.
அதிலும் இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசன் என்று கூறிவந்த நிலையில் தோனியை காண இந்தியா முழுவதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. டெல்லியாக இருந்தாலும் சரி கொல்கத்வாக இருந்தாலும் சரி மஞ்சள் ஜெர்சியுடன் ரசிகர்கள் குவிக்கின்றர். அப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை அணியுடன் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து பயணிக்கும் பஸ் ட்ரைவர் தண்டபாணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தோனி குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்.

தண்டபானி கூறியது :
அவர்கூறுகையில் “சென்னை அணியில் எனக்கு அனைவரையுமே பிடிக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றார் என்னுடை தல எம்.எஸ். தோனியை மிகவும் பிடிக்கும். அவரை பொறுத்தவரையில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் எப்போதுமே பஸ்சில் வரும்போது ஒரே மாதிரித்தான் இருப்பார். தோனி எப்போதுமே வீரர்கள் மத்தியில் மகிச்சியை வெளிப்படுத்துவார்.
தோனியிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவருக்கு அவருடைய ரசிகர்கள் என்றால் உயிர். அதிலும் இந்த பஸ் மைத்தனத்தின் பக்கம் வந்தாலே ரசிகர்களின் கூட்டம் அதிகமாக கார், பைக் என்று பின்னாடியே வருவார்கள். ஆனால் அவர்களை விட தோனிக்கு ரசிகர்கள் பின்னாடி ஆபத்தாக வருவது பயமாக இருக்கும். ரசிகர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று மிகவும் அழுத்தத்துடன் இருப்பார்.
அந்த பாசத்தினாலேயே தான் அவருக்கு இந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் வருகிறது. என்னுடைய வாழ்க்கையில் மறக்க ம்டுய்யாத தருணம் என்றால் அது 2018ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டில் நாங்கள் கோப்பையை வென்றோம். அப்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் தோனி பேருந்திற்குள் வந்து என்னுடைய கையில் கோப்பையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த தருணத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது என்றார் பஸ் ட்ரைவர் தண்டபானி.





