ஐபிஎல் 2022 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டி ஈடன் கார்ட்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. கான்வே அற்புதமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ருதுராஜ் 35 ரன்களில் வெளியேற அவர் சென்ற உடனே கான்வே 56 ரன்களில் வெளியேறினார். அதற்கு பிறகு களமிறங்கிய துபே 20 பந்துகள் அரை சத்தம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழக்க ரஹானே தொடர்ந்து விளையாடி 29 பந்துகளில் 19 ரன்கள் விலாசினார்.

இதனால் 20 வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தனர் சென்னை அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒட்டுமொத்த அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண ரசிகர்கள் கொல்கத்தா மைதானத்தில் csk செற்சியால் அணிந்து கொண்டு வந்திருந்தார்கள்
ரசிகர்களின் இந்த பெரிய ஆதரவுக்கு நன்றி. இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை KKR ஜெர்சியில் வருவார்கள். அவர்கள் எனக்கு பிரியா விடை கொடுக்க முயற்சி செய்கிறார்கள். எனவே இந்த ரசிகர் கூட்டத்திற்கு மிக்க நன்றி. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் வேலையைச் சரியாக செய்கிறார்கள். அதே போல் நடுவில் சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஒருபுறம் எதிரணியின் விக்கெட் குறைவாக இருந்ததால் விக்கெட்டுகளைப் வேகமாக எடுத்து அழுத்தத்தைத் அவர்களின் மீது தக்கவைக்க வேண்டியிருந்தது. அந்த அணியின் பல பவர் ஹிட்டர்கள் இருப்பதால் அவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். என்னிடம் தெளிவான முடிவு இருந்தது. யாராவது காயமடைந்து எதுவும் செய்யயமுடியவில்லை என்றால் நீங்கள் இளைஞர்களை ஊக்கப்படுத்தி விளையாட வைக்க வேண்டும்.
"I will just say thanks for the support, they came in big numbers. They are trying to give me a Farewell, so thanks a lot to the crowd" – MS DHONI.#MSDhoni #Thala #MSD #WhistlePodu #GOAT𓃵 #ChennaiSuperKings #KKRvCSK pic.twitter.com/lfIwyMvhFj
— Bhuban Chakroborty (@Bhuban131099) April 23, 2023
அந்த வகையில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்த்தவர்கள் ஏனென்றால் அனைவருமே சரியாக திறமையை வெளிப்படுத்தினார்கள். ரஹானேவை பொறுத்தவரையில் ஒருவரை அவருடைய விருப்பத்தில் பேட்டிங் செய்ய வைக்கும் போது அவர்களுடைய திறமையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நாங்கள் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். ஒரு குழுவாக ஒருவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தவும் அணி வெற்றிபெற அனுமதிக்கவும் ஒருவர் தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டும் என்றார் தோனி.





