உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியான ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

சொல்லப்போனால் எம்எஸ் தோனியும், ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்ட நாயகன்கள் யாரும் பெரிய அளவு ரன்களை குவிக்க வில்லை என்றாலும் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
சொல்லப்போனால் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்னுடைய தோல்களில் சுமந்து தனி ஒரு ஆளாக விளையாட்டரங்கத்தை ஆதிக்கம் செய்து ரன் சேர்த்தார். நிதானத்துடன் பொறுமையாக பேட் செய்த அவர் பின்னர் ஓவர்கள் குறைய குறைய நீண்ட ஷாட்களை அடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 23 பந்துகளில் அரை சதத்தையும் விளாசினார்.

அதற்குய பிறகு தொடர்ந்து ரன்களை குவிக்க தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 6களும் 4களுமாக விளாசினார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து அரை சதத்தை எட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களின் உதவியுடன் 92 ரன்கள் எடுத்து தன்னுடைய ஐபிஎல் சத்தத்தை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார். இந்நிலையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்ற்றுக்கு பாராட்டுக்கள் குவிந்த வன்னமாக இருக்கிறது.
Legend Dhoni ke sath aisa nhi karna chahiye thaa 😈 @msdhoni #nohandshake #MSDhoni #ipl2023 #HardikPandya pic.twitter.com/5wdUNbFrXv
— Sandeep Kumar (@s_kumar3872) March 31, 2023
இவை ஒருபுறம் இருக்க மறுபுறம் ஹர்திக் பாண்டியாவும் மோசமான கேப்டன்ஷிக்காக தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்படுகிறார். ஹர்திக் பாண்டியா பந்து வீசிய 2 ஓவரில் 25 ரன்களை கொடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதே போல ஐபிஎல் போட்டியின் தொடக்கத்திலேயே மற்ற அனைவரிடமும் கைகுலுக்கிய ஹர்திக் தோனியுடன் கைகுலுக்கவில்லை. இதனையெல்லாம் சேர்த்து வைத்து நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியனை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.





