இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட நிலையில் காயத்திலிருது திரும்பி வந்துள்ள பும்ராவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பும்ரா கடந்த வருடம் முதுகில் ஒரு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பும்ரா பயிற்சி எடுத்து வந்த நிலையில் தான் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக உழைத்த நிலையில் தான் வரும் உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாளர்கள் பும்ராவை சோதனை செய்தனர். அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் பும்ரா தன்னுடைய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் தான் மீண்டும் வந்துவிட்டேன் என்பதை உலகிற்கு கூறினார் பும்ரா. மேலும் இந்த போட்டி முடிந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியானது இன்னமும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் பும்ரா, இந்த போட்டி பும்ராவுக்கு முக்கியமான காலகட்டம் என்பதினால் அசத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்ப்ரோஸ் பும்ராவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அவர் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் கர்ட்லி அம்ப்ரோஸ் கூறுகையில் “பும்ரா இந்திய பந்துவீச்சு வரிசைக்கு ஒரு சொத்து, அவருக்கு எனது அறிவுரை என்னவென்றால், அதை கொஞ்சம் கொஞ்சமாக காலம் எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். மீண்டும் அவசரப்பட வேண்டாம். நீங்கள் மீண்டும் விளையாட்டில் மிகவும் வசதியாக இருப்பதாக என்னும் போது முதல் பந்திலிருந்தே பழையபடி விளையாட தொடங்கலாம். அவசரப்பட்டு முதல் பந்தில் இருந்தே தாக்கத்தை உருவாக்க முயற்சி செய்ய கூடாது. அது புத்திசாலித்தனமான விஷயம் அல்ல.

ஏனென்றால் நீங்கள் மீண்டும் காயமடைவதை விரும்பவில்லை. ஜஸ்பிரித் பும்ரா ஒரு அற்புதமான பந்து வீச்சாளர். நான் பார்த்த வேகப்பந்து வீச்சாளர்களில் இருந்து அவர் மிகவும் வித்தியாசமானவர், மிகவும் வழக்கத்திற்கு மாறானவர், ஆனால் மிகவும் திறமையானவர். காயத்திற்குப் பிறகு நீங்கள் திரும்பி வரும்போது பொறுமையாக தொடங்குங்கள். நீங்கள் மீண்டும் காயமடைந்தால் போது மனத்தில் வலியை ஏற்படுத்தும்.
நீங்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு வந்தவுடன், அழுத்தம் அதிகரிக்கிறது. சில நேரங்களில், நீங்கள் போதுமான அழுத்தத்தை சமாளிக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நீங்கள் தவறு செய்யலாம், மேலும் அதனால் உங்களது ஆட்டத்தை இழக்க நேரிடலாம். மற்ற அணியும் இறுதிப் போட்டிக்கு நன்கு தயாராக உள்ளது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த நாளில் சிறப்பாக விளையாடுபவர்கள் வெற்றியடைவார்கள் என்றார் அம்ப்ரோஸ்.



