கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்றால் அது எம்.எஸ் தோனி தான். இந்நிலையில் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இருந்த போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணைக்க தொடர்ந்து விளையாடிவரும் தோனி அடுத்த ஆண்டும் விளையாட போவதாக கூறியிருந்தார். அதே போல தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி இந்தியா அணிக்காக கிரிக்கெட்டில் விளையாடி கொண்டிருக்கும் போதே கேப்டன் பதவியில் இருந்து விலகி விராட் கோலிக்கு வழி விட்டார். மேலும் விராட் கோலியும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி 2019 உலக கோப்பையின் 1 செமி பைனல் வரையில் கொண்டு வந்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக தோல்வியை தழுவியது இந்தியா.
இந்நிலையில் 2024 உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஐபிஎல் 2024 தொடரானது நடந்து வருகிறது. இதில் தோனி சென்னை அணியில் கேப்டனாக இல்லை என்றாலும் அவர் வந்து ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறார்.இந்நிலையில் தான் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தோனி குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் :இது ஐபிஎல்-லை மட்டும் அல்ல தென்னாப்பிரிக்கற்களையும் என்னையும் மூழ்கடித்தது, உண்மையாகச் சொல்வதானால், நான் அதிகம் டிவி பார்ப்பதில்லை, ஆனால் ஐபிஎல் இருக்கும்போது நான் இருக்கையில் ஒட்டிக்கொண்டது போல் தெரிகிறது. என் காதலி என் டிவி விடைந்துவிடும் என்று அவர் கூறுகிறார்.
நாம் தோனியிடம் என்ன எதிர்பார்கிறோமோ அது அப்படியே நமக்கு கிடைக்கிறது. ரசிகரின் பார்வையில் இருந்து பார்த்தேன், ரசித்தேன். கடந்த ஆட்டத்தின் போது தோனி விளையாடுவதை பார்த்தன் காரணமாக நான் மிகவும் சிறந்த மனநிலையில் இருக்கிறேன். எனவே எம்எஸ் தோனி நடுவே இறங்கி பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும். அவர் சிறந்த வீரர், இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து ஆடவேண்டியும் என்கிறார் டேல் ஸ்டெயின். Dale Steyn on MS Dhoni’s Batting in IPL 2024





