தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 26ஆவது போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியை இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி இந்த உலகக் கோப்பை போட்டியாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளின் இழந்து 270 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக ஷகீல் 52 ரண்களும் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்ளும் சாதாப் கான் 43 ரன்களையும் குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஷம்சி நான்கு விக்கெட்டுகளையும் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் கோட்ஸி இரண்டு விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தார். 271 ரன்கள் என்ற இலக்கை கொண்டு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக தொடக்கம் கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அணி ஓவர்களில் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா அணியின் அதிகபட்சமாக ஏடன் மார்க்ரம் 68 ரன்களும் டேவிட் மில்லர் 29 ரன்களும் கேப்டன் பவுமா 28 ரண்களையும் அடித்திருந்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது வாசிம் இரண்டு விக்கெட் களையும் அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் உஸ்மானிர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது இதே போல் இருந்தால் இந்த உலக கோப்பை அரை இறுதியில் வருவது சந்தேகம் என்றும் பலரும் பாகிஸ்தானை விமர்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்வி குறித்தும் கடந்த போட்டியில் பாபர் அசாம் செயல் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கூறுகையில் “இது முகமது நவாஸின் மோசமான ஒரு பந்துவீச்சு இதை விட அதிக இப்திகர் அது கூட சிறப்பாக பந்து வீசி இருப்பார். நடப்பு உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேறியது துர்தஷ்டமானது. பாகிஸ்தான அணி நிறைய எக்ஸ்ட்ராஸ்களை போட்டது. 21 எக்ஸ்ட்ராஸ்களை போட்டு இருந்தது. எக்ஸ்ட்ராஸ்களை கட்டுப்படுத்து இருந்தால் உன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம்.
கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் யாக்கர் முயற்சி செய்யவில்லை. அந்த நேரத்தில் கேப்டன் பாபர் அசாம் செயல்பாடுகள் மிகவும் சோர்வாக இருந்தது. குறைந்தபட்சம் கடைசி கட்ட பேட்மின்களுக்காக ஸ்லிப் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் பாகிஸ்தான் ஒட்டுமொத்த அணியாக இந்த போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டது வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பமும் ஆக்ரோஷமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் இறுதியில் வைத்துவிட்டு போன 20 பந்துகளை முழுமையாக விளையாடிருந்தால் ஒரு வேலை அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.



