ஐபிஎல் போட்டியானது முடிவடைந்த நிலையில் நாளை உலக கோப்பை போட்டியானது தொடங்க இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டிக்கு பிறகு மீண்டும் டி20 அதிரடியானது நீடிக்க இருப்பதினால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இந்த உலக கோப்பை தொடரானது அமெரிக்காவில் நடப்பதினால் இந்திய ரசிகர்களுக்கு அங்கு சென்று விளையாட்டை பார்ப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கும்.

அதே போலத் மற்ற அணிகளுக்கும். இருந்த போதிலும் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எந்த விதமான பிட்சிலும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஐம்பது ஓவர் உலக கோப்பையை தட்டிச் சென்றது. இருந்த போதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் அரையிறுதி போட்டிக்கு செல்லமுடியாமல் வெளியேறியது.
இந்நிலையில் இந்த முறை ஆஸ்திரேலிய அணியானது டெஸ்ட் மற்றும் ஐம்பது ஓவர் உலக கோப்பை என தொடந்து வெற்றிகளை பெற்று வருகிறது. மேலும் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக மிட்சல் மார்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கும் இது கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் சாம்பியன் டிராபி குறித்தும், உலக கோப்பை குறித்தும் பேசியுள்ளார் டேவிட் வார்னர்.

அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவிற்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நான் தேவை படமாட்டேன். நாங்கள் எப்போதும் அச்சமின்றி விளையாடி வருகிறோம், அதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தோம் என்று நினைக்கிறேன்.
ஒரு அணியில் எங்களின் இடத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை, எங்களால் முடிந்ததைச் செய்வதில் அக்கறை காட்டுகிறோம். மேலும் நாங்கள் என்ன செய்தாலும் அந்த தொடரில் நாங்கள் அந்த மேட்ச் வின்னராக இருக்க முயற்சிக்கிறோம்.அதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால் மேட்ச் வின்னராக இருக்க எங்களிடம் விஷியங்கள் உள்ளன.
ஒருவர் ஒரு நாள் அதிரடியாக ஆடினால். அடுத்த நாள் இன்னொருவர் அதிரடியாக விளையாட வருவார். எனவே எங்களுக்கு ஆறு பேர் உள்ளனர். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் 60 முதல் 80 ரன்களை எந்த நிலையில் எடுத்தாலும் அந்த போட்டியில் நாங்கள் அதிக ஸ்கோரை பெறுவோம் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர்.





