ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டி எப்படியோ பல தடைகளுக்கு பிறகு நேற்று அஹமதாபத்தில் CSK vs GT போட்டியில் சென்னை ஜடேஜாவின் அற்புதமான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் தோனி மற்றும் சென்னை அணி 5முறை ஐபிஎல் பைனல் போட்டிகளில் வென்று மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் தான் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான மிஸ்கின் ஐபிஎல் பற்றியும் தோனி பற்றியும் விமர்சித்து கூறியுள்ளார்.

இயக்குனர் மிஸ்கின் இந்த ஐபிஎல் பைனல் போட்டிக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஸ்கின் கூறுகையில் “நான் சிறு வதில் என்னுடைய நண்பர்களுடன் கிரியேட் விளையாடியிருக்கிறேன். இதனால் நானும் கிரிக்கெட் வீரனாக வருவேன் என்று நினைத்தேன் ஆனால் உண்மையான சூழ்நிலை அதற்கு பிறகு தான் தெரிந்தது.சச்சின் கிரிக்கெட்டில் இருந்தவரையில் அதை பார்த்தேன்.அதற்கு பிறகு பார்க்கவில்லை. கிரிக்கெட் உணைர்ச்சி பூர்வமான விளையாட்டில் இருந்து மாறிவிட்டது.
அப்போதெல்லாம் ரிச்சர்ட் ஹார்லி போன்ற ஒரு நல்ல பந்துவீசாளர் பந்துவீசும் போது அவர் போடுகின்ற பந்து ஸ்விங் ஆகி உள்ளே வருகிறதா அல்லது வெளியே செல்கிறதா என்றே தெரியாது. எனக்கு கிரிக்கெட்டில் அதிகம் பிடித்தவர்கள் கவாஸ்கர், சச்சின், அசாருதீன், கபில்தேவ் போன்றவர்கள்.கிரிக்கெட் என்பது ஆழமாகவும், அருமையாகவும் இருக்கும் ஒரு போட்டி.

அப்போதெல்லாம் பந்துவீச்சாளர் சிறந்த பந்தை வீசினால் பேட்ஸ்மேன்கள் பாராட்டுவார்கள். ஆனால் இப்போது வெற்றியை மட்டுமே எண்ணி விளையாடுகிறார்கள். எனக்கு சினிமாவை கேற்றுக்கொடுத்து கிரிக்கெட் தான். கிரிக்கெட் பார்பவர்க் கதை எழுதுபவவாக மாறலாம். அதற்கு உதரணமாக இந்திய – பாக்கிஸ்தான் போட்டியை கூறலாம். ஆனால் இப்போது ஒரு ஓவரில் 1 சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் மோசமான வீர்ர் என்று விமர்சிக்கின்றனர்.
என்னுடைய உடலை பார்த்து நான் விளையாட்டு வீரர் இல்லை என்று நினைக்கலாம். ஆனல் நானும் ஒரு விளையாட்டு வீரர் தான். நான் கிரிக்கெட் தவிர்த்து அதிக கிரிக்கெட் பூத்தங்களை படிக்கிறேன். ஆனால் நான் ஐபிஎல் போட்டியை பார்ப்பதில்லை. என்னுடைய நண்பர்கள் தினமும் 5 மணிநேரம் டிவி அருகே அமர்ந்து நேரத்தை வீணடிக்கின்றனர். சொல்லப்போனால் ஐபிஎல் காலங்களில் படங்கள் வெளியிட தயங்குவதற்கு இதுதான் காரணம்.

மேலும் தோனியை பற்றி பேசிய மிஸ்கின் கூறுகையில் “தோனி ஓய்வு பெற்று விட்டாலும் இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறார். அவருடைய ஹெலிகாப்டர் எனக்கு பிடிக்கும். தோனி நல்ல கேப்டன், அணியை சிறப்பாக நடத்துவார், ஆனால் ஒரு நல்ல கீப்பர் தவிர நல்ல பேட்ஸ்மேன் கிடையாது. நானும் கிரிக்கெட்டில் கேபின் செய்துள்ளேன். ஒரு கீப்பர் என்றால் உடனடியாக முடிவு எடுக்கும் திறமை வேண்டும் அது தோனியிடம் இருக்கிறது. எப்படி போட்டாலும் 6 அடிக்க வேண்டும் என்ற நேரத்தில் பந்துவீச்சார்களுக்கு மதிப்பு கிடைத்தில்லை என்றார் இயக்குனர் மிஸ்கின்





