இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போல தோனி 2019 உலக கோப்பை போட்டியில் ஆட்டமிழந்ததையும் யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் தன்னுடைய முதல் ஆட்டத்தை ரன் அவுட் மூலம் ஆரம்பித்த தோனி இந்தியாவுக்கான தன்னுடைய கடைசி ஆட்டத்திலும் ரன் அவுட் ஆனார். அது இனித்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருந்தது.
அதற்கு பிறகு தோனி இந்தியாவிற்காக விளையாடாத நிலையில் ஆகஸ்ட் 15,2020 அன்று, MS தோனி இப்போது பிரபலமான Instagram இடுகையில் தனது ஓய்வை அறிவித்தார். “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 1929 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராகக் கருதுங்கள்” என்று அறிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பெரும்பலம் பேசாத தோனி தற்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “நெருக்கமான ஆட்டங்களில் தோல்வியடையும் போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் எனது திட்டங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். இந்தியாவுக்காக நான் விளையாடிய கடைசி ஆட்டம் இதுவாகும். ஒரு வருடம் கழித்து அந்த அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் அன்று தான் நான் ஓய்வு பெற்றேன் என்று முடிவு செய்து விட்டேன்” என்று தோனி கூறினார்.

இந்நிலையில் இந்தியா 2019 ஆம் ஆண்டில் தோல்வியடைந்தது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் பங்கர் கூறுகையில் “இந்தியா சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்ததால் அனைத்து வீரர்களுக்கும் இது ஒரு இதயத்தை உடைக்கும் தருணம். வீரர்கள் குழந்தைகளைப் போல அழுதனர். எம்எஸ் தோனி இருந்தார் குழந்தைகள் போல் அழுகிறார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் கண்களில் கண்ணீர். அத்தகைய கதைகள் இன்னும் உள்ளன ட்ரஸிங் ரூமில் என்றார் பாங்கர்.





