இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் சில இக்கட்டான சூழ்நிலைகளில் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா மூன்று முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.
MS Dhoni – the crowd favourite. pic.twitter.com/ltpud9P9Jj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 25, 2023
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை 10 முறை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து சென்று 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். மேலும் இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 182.45 என்ற அபார ஸ்டிரைக் ரேட்டில் 104 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்டம்புகளுக்குப் பின்னால் வழக்கம் போல் மின்னல் வேகத்தில் ஸ்டாம்பிங் செய்வது இவருக்கு வயதே ஆகாத என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழுப்பியது.
இந்நிலையில் இந்த வருட சீசனோடு தோனி விடைபெறுவார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளித்து முற்றுபுள்ளி வைத்தார் தோனி. ஆனால் ஐபிஎல் போட்டியின் இடையிலேயே தோனிக்கு மூலங்களில் காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தோனி அந்த காயத்தோடே பல போட்டிகளில் விளையாடி வெற்றியும் பெற்று கொடுத்தார். இந்த காயத்தால் இந்த சீசனோடு தோனி ஓய்வு பெறுவார் என்றிருந்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக இன்னமும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று கூறினார்.

இந்நிலையில் தோனி விமானத்தின் பயணம் செய்யும் வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமான பணிப்பெண் தோனிக்கு சொக்கோலேட்டுகளை வழங்குகிறார். அதனை தோனியும் அன்போடு வாங்கிக்கொள்கிறார். மேலும் அருகே தோனியின் மனைவி சாக்ஷி தோனியும் அமர்ந்திருக்கிறார். ஆனால் அந்த வீடியோவில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தோனி பொதுவாகவே கிரிக்கெட்டில் மட்டும்ல்லாமல் வீடியோ கேம்களிலும் ஆர்வம் கொண்டவர்.

கடந்த ஐபிஎல் 2023 போட்டியின் போது கூட ஓய்வு நேரத்தில் தோனி சகருடன் வீடியோ கேம் விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலான நிலையில் தான் இந்த வீடியோவில் தோனி Candy Crush விளையாடினார். Pubg, free fire போன்ற விளையாடுகள் வருவதற்கு முன்னேரே candy crush பெருமளவு விளையாடப்பட்ட கேம்களில் ஒன்றாக இருந்தது. அந்த நிலையில் தான் தோனி Candy Crush விளையாடும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





