எம்எஸ் தோனியும் விராட் கோலியும் தற்போது உள்ள நவீன இந்தியாவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இருவர். கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி பற்றி பல விஷியங்களை அவர் பகிந்து கொன்வார். ஆனால் எம்எஸ் தோனி ஊடகங்களில் அதிகமாக தன்னை வெளிப்படுத்தி கொள்ள மாட்டார். எனவே கோலியை பற்றி அரிதாகவே பேசியுள்ளார்.

அப்படிப்பட்ட நிலையில் தான் சமூக ஊடகங்களில் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதற்கு பிறகு ட்ரெஸிங் ரூமில் தோனி கோலியை பற்றி தனது அணியின் சக வீரர் ஒருவரிடம் சுருக்கமாகப் பேசுவதை பற்றிய வீடியோ தான் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ :
அந்த வீடியோவில் “விராட் முதல் பந்தை இப்படி ஆடுவதில்லை. அது எப்பொழுதும் இங்கே இருக்கிறது” என்று தோனி பேசுவதை கேட்கலாம். அதே நாளில்தான் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த போட்டியில் விராட் கோலி 46 பந்துகளில் 55ரன்களை அடித்தார். அதோடு ஐபிஎல் போட்டிகளில் 7000 ரன்களை கடந்தவர் என்ற படத்தையும் பெற்றார்.
Dhoni talking to one of the CSK members by mentioning the name of Virat Kohli. pic.twitter.com/8Y09cWMvLw
— Johns. (@CricCrazyJohns) May 6, 2023
சென்னை அணியை பொறுத்த வரையில் 2023 ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த அணியாக இருந்து வருகிறது. விளையாடிய 11 போட்டிகளில் 13 புள்ளிகளைக் எடுத்து தற்போது குஜராத் ஜெயன்ட்ஸுக்குப் பின்னால் 2வது இடத்தில் உள்ளனர். மேலும் இந்த சீசன் தான் எம்எஸ் தோனி கடைசி ஐபிஎல் சீசன் என்றும், கோப்பையுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையை முடிக்க விரும்புவார் என்றும் வதந்தி பரவியது.

ஆனால் அவர் மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் ஏனெனில் CSK Vs LSG இன் போது தொகுப்பாளர் டேனி மோரிசன் தனது கடைசி ஐபிஎல் சீசனில் அவர் எப்படி உணர்கிறார் என்று கேட்டபோது, தோனி “இது எனது கடைசி என்று நீங்கள் தான் முடிவு செய்துள்ளீர்கள் என்று சிரித்தபடி கூறினார். இதனால் அவர் ஐபிஎல் 2024ல் விளையாடுவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் இந்த சீசன் சிறந்ததாக இல்லை. விளையாடிய 10 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இருப்பினும் விராட் கோலி ஒரு சிறப்பாக இந்த சீசனில் விளையாடி இருக்கிறார். அவர் இந்த சீசனில் 419 ரன்கள் எடுத்துள்ளார் மேலும் ஆரஞ்சு கேப் அட்டவணையில் 5வது இடத்தில் உள்ளார். அதோடு கோலி 6 அரைசதங்களை அடித்துள்ளார்.





