
ஐபிஎல் பொறுத்தவரை அதிக அளவில் கோப்பைகளை வென்ற அணி என்று பார்த்தால் அது சென்னை அணி மற்றும் மும்பை அணி தான். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் பெங்களூரு அணி இது வரை ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை. இந்த இரண்டு அணிகளுக்கும் இருக்கும் ரசிகர்கள் பலத்திற்கு பெங்களூரு அணிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் பலம் உள்ளது.

சென்னை அணியின் கேப்டனாக நீண்ட ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அதே போல் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா பதவிஏற்பதற்கு முன்பு வரை மும்பை அணி ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை. அவர் கேப்டனாக பதவி ஏற்ற பின் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.ஆனால் சில தினங்களுக்கு முன்பு மும்பை அணி அவரை கேப்டன் பதவியில் இருந்து விளக்கியது.
பெங்களூரு அணியோ கேப்டனகளை அவ்வபோது மாற்றி தான் வருகிறது. தற்போது டு பிளசிஸ் கேப்டனாக இருந்தாலும் இதற்க்கு முன்பு விராட் கோலி இருந்து வந்தார். இருப்பினும் அவரால் கூட ஒரு கோப்பையை வெல்லவில்லை. இது குறித்து பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் தோனியிடம் நீங்கள் பெங்களூரு அணியை வழிநடத்துவீர்களா? நீங்கள் இது வரை 5 கோப்பையை வென்று உள்ளீர்கள் பெங்களூரு அணிக்கு விளையாட வரும் படியும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு தோனி கூறுகையில், உங்களுக்கு தெரியும். அவர்கள் மிகவும் நல்ல அணி. மேலும், நீங்கள் பார்க்க வேண்டியது என்னவென்றால், அனைத்தும் திட்டத்தின் படி நடக்கவில்லை. ஐபிஎல்லில் உள்ள அனைத்து 10 அணிகளும், முழு வீரர்களைக் கொண்டிருந்தால், மிகவும் வலுவான அணிகள். காயம் காரணமாக ஒரு சில வீரர்களை நீங்கள் காணவில்லை என்றால் பிரச்சனை எழுகிறது. எனவே, அவர்கள் மிகவும் நல்ல அணி, அனைவருக்கும் ஐபிஎல்லில் நியாயமான வாய்ப்பு உள்ளது.
MS Dhoni's response when one of the RCB fan asked Dhoni to come and support RCB to win a title.
— Johns. (@CricCrazyJohns) December 20, 2023
– This is 👏pic.twitter.com/mcvlfrMBwI
இப்போதைக்கு, எனது சொந்த அணியில் நான் கவலைப்பட நிறைய விஷயங்கள் உள்ளன. நான் ஒவ்வொரு அணிக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன், ஆனால் இப்போது என்னால் அதிகம் செய்ய முடியாது. மற்றொரு அணியை ஆதரிக்க அல்லது உதவ நான் வெளியே வருவதை கற்பனை செய்து பாருங்கள். எங்கள் ரசிகர்கள் எப்படி உணருவார்கள்? நீங்கள் எப்படி உணருவீர்கள்? என்றும் அவர் கூறியிருந்தார்.





