உலகெங்கும் நடைபெறும் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

ரோஹித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024 க்கு முன்னதாக நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நடந்தது அது ஐபிஎல்லில் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த நடவடிக்கை இறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டருக்காக அதிக பரிமாற்றக் கட்டணத்தை செலுத்தியதாக செய்தி வெளியாகி இருந்தது. பாண்டியாவை விடுவிப்பதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 100 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாண்டியாவின் விற்பனை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பல வழிகளில் உதவியது. 2021 இல், CVC கேபிடல் IPL இன் ஒரு பகுதியாக இருக்க INR 5625 கோடியை செலுத்தியது, MI ஒரு வணிகக் குடும்பத்தால் நடத்தப்படுகிறது, GT க்கு அப்படி இல்லை. பாண்டியாவின் வர்த்தக ஒப்பந்தத்தில் குஜராத்தின் பர்ஸ் 15 கோடி ரூபாய் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





