உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதுவே அவரது முதல் உலககோப்பை போட்டியாகும்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வெச்ச தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்ய இருக்கின்றது. மேலும் இந்திய அணிகள் சார்பில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முகமது ஷமி அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணி ஆரம்பத்தில் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பின் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. இந்திய அணியின் பௌலிங் மற்றும் பீல்டிங் சற்று சுமாராகவே தான் இருந்தது. எளிதான நிறைய கேட்சுகளை தவறவிட்டு வந்தனர். அதனை எல்லாம் சரியாக பயன்படுத்தி கொண்ட நியூசிலாந்து அணி 274 ரன்களை குவித்தது. 5௦ ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை குவித்தது.

நியூசிலாந்து அணியின் சார்பாக அதிகபட்சமாக மிட்செல் ரன்களும் ரச்சின் ரவீந்திர 75 ரன்களும் பிலிப்ஸ் 23 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின் சரியான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் போட்டியின் கடைசி கட்டங்களில் தான் போட்டிக்குள் வந்தனர். இந்திய அணியின் பௌலர்களில் அதிக பட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது நியுசிலாந்து அணி.
View this post on Instagram
போட்டிக்கு இடையில், ரச்சின் ரவீந்திர மற்றும் மிட்செல் இடையேயான பார்ட்னர்ஷிப் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை கவலையடையச் செய்தது. இதனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் மாஸ்ட்ரோவுமான விராட் கோலி, 32வது ஓவரில் ரச்சின் ரவீந்திரவை அவுட்டாக்க உதவினார். இரண்டு கிரிக்கெட் வீரர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது, அதில் விராட் கோலி ரோஹித் சர்மாவுக்கு ஒரு அறிவுரை வழங்குவதைக் காண முடிந்தது, இது கேப்டன் விவாதித்தார். இந்த வீடியோவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் பகிர்ந்துள்ளது. விராட் கோலி பரிந்துரைத்ததை ரோஹித் சர்மா நம்பியதாகத் தெரியவில்லை, ஆனால் இரண்டு மூத்த வீரர்களும் முன்னாள் கேப்டனுடன் சிறிது நேரம் வாதிட்டனர். அதனை சில ரசிகர்கள் இருவருக்கும் சண்டை என இணையத்தில் பரப்பி வருகின்றன.



