சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடரை வென்றாலும் அந்த தொடரில் பால் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலி, கவுதம் கம்பீர், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் தொடர்பான பிரச்னை தான். அதாவது நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி vs லக்னோ ஜென்ட்ஸ் போட்டியின் போது விராட் மற்றும் நவீன் உல் ஹக் இருப்பவருக்கும் மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் உலக கோப்பை போட்டியிலும் தொடர்ந்த நிலையில் நேற்று நடந்த இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியின் போது நாவின் உல் ஹக் பேட்டிங் வந்தார் அப்போதும் இதே போன்று நடந்தது. ஆனால் போட்டி முடிந்த பிறகு விராட் கோலியும் நவீன் உல் ஹக் இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி கொண்டனர். இதிலிருந்து இருபவரும் சமாதம் ஆகிவிட்டனர் என்பது தெளிவாக தெரிவந்தது. இப்படிப்பட்ட நிலையில் இது குறித்து பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

அவர் கூறுகையில் “ஐபிஎலில் கொஞ்சம் பதற்றம் இருந்தது. ஆனால் அவர்கள் அதனை சரி செய்து கொண்டு கட்டிப்பிடிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நவீன்-உல்-ஹக் பேட்டிங் செய்ய வந்தபோது, ரசிகர்கள் கூட்டம் கோலியின் பெயரை ஆரவாரம் செய்தது. அவர்கள் உண்மையில் அவரது தோலுக்கு அடியில் இருக்க விரும்பினர். ஆனால் அவர்கள் மாற்றுக்கொண்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது, அதுதான் உலக கிரிக்கெட்டுக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன்.
ஒரு எதிர்மறையான விஷயத்தை நீங்கள் நீண்ட காலமாக தொடர விரும்பவில்லை. அது இருவரின் மனதிலும் இருந்தது, அதை அவர்கள் துடைத்து கம்பளத்தின் கீழ் கொட்டியது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அவர்கள் ஒன்றாக இணைந்து சிரித்த புகைப்படத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்று கூறினார் தினேஷ் கார்த்திக்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய ஜாகீர் கான் கூறுகையில் “விராட் பேட்டிங் செய்ய வந்த போது என்ன நடந்தாலும் நான் எனது விக்கெட்டை நவீனுக்கு கொடுக்கப் போவதில்லை என்பது போல் இருந்தது. அந்தக் கட்டத்தைத் தாண்டிய அவர், அதன் பிறகு, கடந்த காலத்தில் இருந்த கசப்பான விஷயங்களை விட்டுவிட்டு முன்னேறுவதற்கான வழியை ஏற்படுத்தினார். எதிர்காலத்தில் இது மீண்டும் நடக்காது என்று இல்லை. இருவரும் கடுமையான போட்டியாளர்கள் என்பதால் அது இன்னும் நடக்கலாம்.
நல்ல விஷயம் என்னவென்றால், என்ன நடந்தாலும், அவர்கள் இப்போது எதிர்நோக்குகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். போட்டியும் சண்டையும் அங்கேயே இருக்க வேண்டும் ஆனால் எல்லைக்குள் இருக்க வேண்டும், அதனை தவிர்த்து வெளியே இருக்க கூடாது என்றார் ஜாகீர் கான்.




