இந்திய கிரிக்கெட் அணி இந்த உலகக்கோப்பையில் வெற்றிபெற முடியாவிட்டால், இன்னும் 3 உலகக்கோப்பை தொடரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, உலகக் கோப்பை அரையிறுதியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி நாளை மும்பை வாங்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை மைதானத்தை பொறுத்தவரையில் வெளிச்சத்தின் போது பேட்டிங்கில் எந்த தாக்த்தையும் ஏற்படுத்தது. மேலும் அந்த மைதானம் சிறியது என்பதினால் அதிகமான ரன்களை பேட்ஸ்மேன்களால் குவிக்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் பந்தின் அசைவு என்பது மைதான விளக்குகளின் கீழே அதிகமாக இருக்கும்.
இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி என்பது கொஞ்சம் நிதானமாக விளையாடிவிட்டு பின்னர் பணி வந்த்தும் பந்துவீச்சாளர்கள் பந்துகளை பறக்க விடலாம். இந்த காரணத்தினால் முதலில் பேட்டிங் செய்யும் அணியானது டாஸை வென்று பேட்டிங் செய்தால் அது பெரிய நன்மைகளை அணிக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையது.

எனவே இந்த போட்டியில் டாஸ் என்பது முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் நாக்கவுட் போட்டிகளின் போது தடுமாறுகிறது. இதனை சுட்டிக்காட்டி தற்போது பேசியுள்ளார் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்.
அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றால், இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும், இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அரை இறுதிப் போட்டிதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது.
உலக கோப்பையில் இது ஒரு பெரிய ஆட்டம். மும்பையில் நடக்கும் பெரிய ஆட்டங்களில், டீம் இந்தியா முதலில் பேட் செய்து ஒரு பெரிய மொத்தத்தை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்படி எடுத்தால் அவர்கள் அதைப் பாதுகாப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் அவர்களின் பந்துவீச்சு இதுவரை சந்தேகத்திற்கு இடமின்றி போட்டியில் சிறப்பாக இருந்து வருகிறது என்றார் தினேஷ் கார்த்திக்.



