இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோஹ்லி ஓய்வு எடுத்ததற்கான காரணம் குறித்து தவறான தகவல்களைப் பகிர்ந்ததன் மூலம் நான் ஒரு பயங்கரமான தவறு செய்ததாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கொடுத்த தகவல் முற்றிலும் உண்மை இல்லை என்றும், தற்போது என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறினார். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது.

அதில் இந்திய அணி இன்று சிறப்பான பந்து வீச்சின் வெளிப்பாடாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 396 ரன்களை குவித்து இருந்தது. இதில் இந்திய அணிக்கு ரன்களை குவிக்க காரணமாக இருந்தவர் ஜெய்ஸ்வால் தான். தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை அவர் குவித்து இருந்தார்.
அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 253 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் அதே நாளில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 255 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் கில் தான். 104 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்னில் விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். விஷயங்கள் இருக்கும் நிலையில், 35 வயதான அவர் ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்கவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தவறவிடக்கூடும், ஆனால் இந்த விஷயத்தில் போதுமான தெளிவு இல்லை. சமீபத்தில், அவரது நீண்டகால நண்பரான ஏபி டி வில்லியர்ஸ் சில செய்திகளை கூறி இருந்தார். ஆனால் அதை கோலியோ அனுஷ்கா ஷர்மா யாரும் உறுதி படுத்தவில்லை.

அந்த செய்தி இணையத்தில் பரவி வைரலான நிலையில் இது குறித்து டிவில்லியர்ஸ் தற்போது அவர் சில கருத்துக்களை கூறி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில். நான் ஒரு பயங்கரமான தவறு செய்து இருகின்றேன். பொய்யான தகவலைப் பகிர்ந்தேன், அது உண்மையல்ல, விராட் கோலிக்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது – ஏபி டி வில்லியர்ஸ். விராட் கோலி மூன்றாவது தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக் கூறியாகி உள்ளது.





